நியூசிலாந்து கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராக இருந்த ராஸ்டெய்லர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான அவர், 16 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடினார். 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டெய்லர், 112 டெஸ்ட் , 236 ஒருநாள் கிரிக்கெட், 102 டி20 என மொத்தமாக 450 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 18,195 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ராஸ் டெய்லர் சுயசரிதை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் வைத்திருக்கும் ஒரு குற்றச்சாட்டு நியூசிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஸ் டெய்லர் எழுதியிருக்கும் சுயசரிதை புத்தகத்தில் நிறவெறி குறித்து பகிரங்கமாக எழுதியுள்ளார். நியூசிலாந்தில் கிரிக்கெட்டில் வெள்ளையாக இருப்பவர்கள் தான் அதிகம். மாநிறத்தை கொண்டவன் நான் மட்டுமே. பெரும்பாலான போட்டிகளில் வெள்ளை நிற வரிசையில் நான் மட்டும் வேறு நிறத்தில் இருந்தது சவாலாக இருந்தது. ஓய்வு அறையில் பல சமயங்களில் நிறம் குறித்த விமர்சனங்களை சந்தித்துள்ளேன். சக வீரர்களின் விமர்சனம் என்னை காயப்படுத்தியது. இருந்தபோதும் நான் அதனை பெரிதுபடுத்தவில்லை. 


மேலும் படிக்க | தவானை ஓரம்கட்ட பிசிசிஐ இப்படி பண்ணலாமா? கொதிக்கும் ரசிகர்கள்


ஏனென்றால் அந்த சூழலில் அதனை பெரிதுபடுத்தினால் பிரச்சினை மோசமாகும் என்பதால் பொறுத்துக்கொண்டு கடந்து வந்துள்ளேன். சக வீரர் ஒருவர் என்னிடம், ராஸ் நீங்கள் பாதி நல்லவன் என அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் அவர் பாதி நல்லவர் என்று சொல்வதன் உண்மையான அர்த்தம் எனக்கு மட்டுமே புரியும். இதுபோன்ற இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளால் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளேன். ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு அது சகஜமான ஒரு கேலி பேச்சாக மட்டுமே தெரிகிறது என ஆதங்கத்துடன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். சுயசரிதையில் ராஸ் டெய்லர் இவ்வாறு எழுதியிருப்பது நியூசிலாந்து கிரிக்கெட்டில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.


மேலும் படிக்க | ரிஷப் பன்டை மீண்டும் சீண்டிய பாலிவுட் இளம் நடிகை; தொடரும் வார்த்தை போர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ