ஐபிஎல் 2020: தனது பெயரை மாற்றுகிறதா? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
பிப்ரவரி 16 ஆம் தேதி ஆர்.சி.பி., அணியின் பெயரில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன.
பெங்களூரு: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2020) புதிய சீசனுக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயரில் மாற்றம் ஏற்படலாம். ஏனெனில் அந்த அணி இன்று (புதன்கிழமை) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அணியின் பெயரை மாற்றியுள்து. மேலும் அந்த பக்கத்தில் இருந்து தனது பெயர், அதன் காட்சி படம் மற்றும் அட்டைப் படத்தை நீக்கியதோடு, அணியின் பெயர் ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் செய்யப்பட்டள்ளது. இது ஒரு புதிய பெயருடன் புதிய லோகோவுடன் அறிவிக்கப்படுவதைக் குறிக்கிறது. கிடைத்த சில தகவல்களின்படி, பிப்ரவரி 16 ஆம் தேதி ஆர்.சி.பி., தங்கள் அணியின் பெயரில் உள்ள ‘பெங்களூரை’ ‘பெங்களூரு’ என்று மாற்றும் எனக் கூறப்பட்டு உள்ளது.
கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இருந்தபோதிலும், ஐபிஎல் போட்டி தொடக்கத்திலிருந்து ஆர்சிபி இன்னும் கோப்பையை வெல்லவில்லை. ஏழு சீசன்களில் கோஹ்லி தான் அணியை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணியில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர்கள்: விராட் கோஹ்லி, மொயீன் அலி, யுஸ்வேந்திர சாஹல், ஏபி டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல், முகமது சிராஜ், பவன் நேகி, உமேஷ் யாதவ், குர்கீரத் மான், தேவதூத் பாடிக்கல், சிவம் டியூப், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி
புதிதாக ஏலம் எடுக்கப்பட்டவர்கள் (மொத்தம் 8 பேர்): ஆரோன் பிஞ்ச் (4.4 கோடி), கிறிஸ் மோரிஸ் (10 கோடி), ஜோசுவா பிலிப் (20 லட்சம்), கேன் ரிச்சர்ட்சன் (4 கோடி), பவன் தேஷ்பாண்டே (20 லட்சம்), டேல் ஸ்டெய்ன் (2 கோடி), ஷாபாஸ் அஹமட் ( 20 லட்சம்), இசுரு உதனா (50 லட்சம்).