ஆஸ்தி vs தென் முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்களும் எடுத்தன.தனது 2_வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் 539 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட துவங்கியது. ஆனால், ஆஸ்திரேலிய அணி 361 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.