சச்சினால் பறிபோன கேப்டன் வாய்ப்பு - யுவராஜ் சிங் ஓபன் டாக்
சச்சின் டெண்டுல்கரால் தனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி பறிபோனதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி மன்னனாக இருந்த யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். இரு உலகக்கோப்பைகளையும் இந்திய அணி வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்த அவருக்கு, இந்திய அணியின் கேப்டன் பதவி மட்டும் தேடி வரவில்லை. அவருக்கு பின்னர் அணியில் இடம் பிடித்த தோனிக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. இது அப்போது சர்ச்சையாக வெடித்தாலும், யுவராஜ் சிங் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்தார்.
மேலும் படிக்க | "ஐ டோன்ட் லைக் 'DUCK’, பட் 'DUCK' லைக்ஸ் மீ"- வைரலாகும் விராட் கோலி மீம்ஸ்!
இப்போது தனக்கு கேப்டன் பதவி கிடைக்காதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் யுவராஜ் சிங். அதில், சச்சினால் தனக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும், அதன் பின்னணியையும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, " கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, அவருக்கும் மூத்த வீரர்களான கங்குலி மற்றும் சச்சின் உள்ளிட்டோருக்கும் மனம் ஒத்துப்போகவில்லை. அவருடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். குறிப்பாக, சச்சினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கிரேக் சேப்பல்.
அந்த நேரத்தில் பயிற்சியாளரா? அல்லது சச்சினா? என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் இருந்தது. நான் தயங்காமல் சச்சினை தேர்ந்தெடுத்து அவருடன் இருந்தேன். முதன்முதலாக சச்சினுக்கு சப்போர்ட் செய்த ஒரே ஆள் நான் தான். நான் அவ்வாறு செய்தது பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. நான் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்தபோதும், 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான கேப்டன் தேர்வில் என்னை நியமிக்கவில்லை. தோனியை கேப்டனாக நியமித்தார்கள். இந்த விஷயம் எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. இருப்பினும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை" என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | தொடர் வெற்றிக்குப் பிறகு வருந்தும் தோனி - மனக்குமுறலுக்கு காரணம் இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR