IPL Century: சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான ஐபிஎல் கிரிக்கெட்டர்கள்
இந்த 4 வீரர்கள் ஐபிஎல்லின் `சச்சின் டெண்டுல்கர்` என்று சொல்லலாம். இவர்கள் 99 ரன்களை எட்டினாலும் சதம் அடிக்கவில்லை என்று வருந்தும் வீரரகள்...
புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டைப் போலவே ஐபிஎல் போட்டியிலும் பல வீரர்கள் நெர்வஸ் நைன்டீஸுக்கு பலியாகி உள்ளனர், ஆனால் 99 ரன்களை எட்டிய பிறகும் சதம் அடிக்க முடியாமல் போனவர்கள்.
இந்த 4 வீரர்கள் ஐபிஎல்லின் 'சச்சின் டெண்டுல்கர்' என்று சொல்லலாம். இவர்கள் 99 ரன்களை எட்டினாலும் சதம் அடிக்கவில்லை என்று வருந்தும் வீரரகள்...
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் மரியாதை உண்டு. இந்திய அணிக்காக விளையாடும் போது அவர் தனது வாழ்க்கையில் 100 சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், சர்வதேச அளவில் 90 முதல் 99 வரை ரன் எடுத்த நிலையில் அதிக முறை (28) டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் என்பது வருத்தமான விஷயம்.
ஐபிஎல் போன்ற பெரிய போட்டிகளில், கிரிக்கெட் வீரர்கள் (IPL Cricketers) நிறைய ரன்களை எடுக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என ரன் மழை பொழிகிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் வீரர்கள் சதத்தை எட்டிய பிறகும் இலக்கைத் தவறவிடுகிறார்கள். 99 ரன்களை எட்டிய பிறகும் சதத்தை பூர்த்தி செய்ய முடியாத அந்த 4 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்.
ALSO READ | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!
1. சுரேஷ் ரெய்னா
ஐபிஎல்லில் சுரேஷ் ரெய்னா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் ஒருமுறை ஒரு ரன் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார். 2013ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது, இந்த சம்பவம் நடைபெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதத்தை முடிக்க ரெய்னாவுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன, ஆனால் அவரால் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது.
2. விராட் கோலி
ஐபிஎல் 2013ல் ஆர்சிபி அணிக்காக விளையாடும் போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி (Virat Kohli) 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 106/3 ஆக இருந்த நிலையில், விராட்டின் இந்த அபாரமான பேட்டிங்கால் ஸ்கோர் போர்டில் 183 ரன்கள் குவிந்தது.
இன்னிங்ஸின் கடைசி பந்தில் கோஹ்லி சதம் அடிக்க 2 ரன்கள் தேவைப்பட்டது. அவர் ஒரு ஓட்டத்தை ஓடி முடித்தார், ஆனால் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது அவர் ரன் அவுட் ஆனார்.
ALSO READ | Adelaide to Johannesburg: கேப்டன் விராட் கோலியின் சிறந்த 5 டெஸ்ட் வெற்றிகள்
3. கிறிஸ் கெய்ல்
'யுனிவர்ஸ் பாஸ்' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், ஐபிஎல் 2019ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது RCBக்கு எதிராக 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார்.
கெய்ல் 95 ரன்களில் இருந்தபோது, கடைசி ஓவரின் 5வது பந்தை வீசிய முகமது சிராஜால் அவுட்டானார். 1 ரன் வித்தியாசத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் கெய்ல்.
4. பிரித்வி ஷா
பிருத்வி ஷாவுக்கு சதத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர் கடைசி ஓவரில் பெவிலியன் திரும்பினார். ஐபிஎல் 2019ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.
12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய அவர் 99 ரன்களில் இருந்தபோது, பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் பிருத்வியிடம் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் சதம் அடிக்கும் வாய்ப்பை பிரித்வி தவறவிட்டார்.
5. கிறிஸ் கெய்ல்
இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே வீரர் கிறிஸ் கெய்ல் மட்டுமே. ஐபிஎல் 2020ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். அவர் எளிதாக சதத்தை பூர்த்தி செய்வார் என்று தோன்றியது.
ஆனால் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அவரை கிளீன் போல்டாக்கினார். இதனால் கோபமடைந்த கெய்ல் தனது மட்டையை மைதானத்தில் வீசினார்.
ALSO READ | புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதுமான அவகாசம் உள்ளது - பிசிசிஐ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR