சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாள்: பிரபலங்கள் வாழ்த்து!!
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தெண்டுல்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாது பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ பிறந்த நாள் வாழ்த்துக்கள் சச்சின், நீங்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும். எனது கிரிக்கெட் ஹீரோ எப்போதும் அவர்தான்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சேவாக் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடவுள் தூங்குகிறார், தப்பு பண்ணுறவங்க தப்பிச்சுக்கலாம்’ இந்தியாவில் நேரத்தையே நிறுத்தும் தகுதி படைத்த மனிதருக்கு,’என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ பிறந்த நாள் வாழ்த்துக்கள் சச்சின், உங்களுடன் சேர்ந்து விளையாடியது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.