முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் தான் தத்தெடுத்த கிராமத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சென்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆந்திர மாநிலம் புட்டம்ராஜூ காந்திரிகா கிராமத்தை தத்தெடுத்தார். அக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறார். 


இன்று சச்சின் தெண்டுல்கர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு இருந்த சமூதாய கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று கிராம மக்களிடம் பேசினார். 


கிராம மக்களின் அன்பினால் முற்றிலும் திணறிவிடேன், கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மிகழ்ச்சியளிக்கிறது என்று சச்சின் தெண்டுல்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.



சச்சின் தெண்டுல்கர் அந்த கிராமத்தை தத்தெடுத்தியதும் இப்போது அங்கு பாதாளச்சாக்கடை அமைப்பும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இப்போது அங்கு 24 மணிநேர குடிநீர் மற்றும் மின்சார சேவை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் விளையாட்டு மைதானம் சமூதாய கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.