ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 31-வது லீக் ஆட்டம் சௌத்தம்டன் ரோஸ் பவுள் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியல் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியின் துவக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 16(17), தமிம் இக்பால் 36(53) ரன்களில் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் உல் ஹாசன் 51(69) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவருக்கு துணையாக முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக விளையாடி 83(87) ரன்கள் குவித்து வெளியேறினார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹூமான் 3 விக்கெட் வீழ்த்தினார், குல்பதின் நபி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரராக களமிறங்கிய குலாப்தீன் நபி 47(75), ராமத் ஷா 24(35) ரன்கள் குவித்து வெளியேறினர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் சமியுள்ளா சின்வாரி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 49(51) ரன்கள் குவித்தார்.
ஆட்டத்தின் 47-வது ஓவர் முடிந்த நிலையில் 200 ரன்கள் குவித்திருந்த ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹாசன் 5 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.