டென்மார்க் ஓபன்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் சாய்னா!
டென்மார்க் நகரில் நடைப்பெற்று வரும் மகளிருக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்!
டென்மார்க் நகரில் நடைப்பெற்று வரும் மகளிருக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்!
டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இத்தொடரின் அரை இறுதி போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் மோதினார்.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி முன்னேறினார்.
இதனையடுத்து இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் பலபறிட்சை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!