Olympics: `A` தர பிரிவில் தகுதி பெற்று வரலாறு படைத்த நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ்
2020 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி கொரோனா காரணமாக ஒத்தி போடப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. முன்னதாக கடந்த முறை 2016 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. அதன்பின் 2020 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி கொரோனா காரணமாக ஒத்தி போடப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் (Olympic Games) பங்கேற்க நீச்சல் பிரிவில் பங்கேற்க இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, ‘ஏ’ தகுதி நிர்ணய நேரத்தின் படி தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ALSO READ | Tokyo Olympics: இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் பெருமையை பெறுவாரா பி.வி. சிந்து?
2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் சனிக்கிழமை வரலாற்றை படைத்தார். ஒலிம்பிக் ஏ பிரிவு தகுதி நேரத்தை கடக்கும் முதல் இந்திய நீச்சல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ரோமில் நடந்த செட் கோலி கோப்பை போட்டிகளில் பங்கேற்ற சஜன் பிரகாஷ் ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டாம்பூச்சி வகை நீச்சல் போட்டியில் பங்கேற்றார். தகுதி பெற அதற்கு 1: 56.38 செகண்டுகள் என்ற ஏ பிரிவு கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 'ஏ' தரத்தில் 0.1 வினாடிகள் முன்னதாக முடித்து சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டி இந்திய நீச்சல் வீராகள் சம்மேளம் ட்வீட் செய்துள்ளது.
நெய்வேலியில் பள்ளிப் படிப்பு பெற்றுள்ள சஜன் பிரகாஷ், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விளையாட்டுப் பயிற்சிக் குழுவில் ஆரம்பக் கட்ட நீச்சல் பயிற்சியை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பக் போட்டிகளை அடுத்து பாராலிம்பிக்ஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டெம்பர் 5ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. போட்டிகள் அனைத்தும், இது வரை இல்லாத அளவிற்கு, முன் எப்போதும் போல் இல்லாமல் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக, மிகுந்த கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:Olympics மற்றும் Wimbledon இல் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு: காரணம் இதுதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR