அமெரிக்காவில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கம் வென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றுள்ளார். முன்னதாக ஆண்களுக்கான தனிநபர் துப்பாக்கிச்சூடு போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா இரு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 


சால்ட் லேக் சிட்டியில் நடைப்பெறும் உலகக் கோப்பை போட்டிகளில் கடந்த 5 ஆண்டுகளாக பங்கேற்று வரும் தீபிகா குமாரிக்கு இது முதல் தங்கம் ஆகும். வில்வித்தை பட்டம் போட்டிகளில் 6 முறை பங்கேற்றுள்ள இவர் இதற்கு முன்னதாக 2011, 2012, 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பியுள்ளார். 


இந்நிலையில் இந்தாண்டு தங்கம பதக்கத்துடன் நாடு திரும்புகின்றார். தங்கம் வென்ற இவர் "நான்கு வெள்ளி பதங்கங்களுக்கு பிறகு தற்போது தங்கம் வென்று இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.


இறுதிப்போட்டியில் இவரை எதிர்கொண்ட ஜெர்மெனியின் மைக்கெல் க்ரூப்பன் சொந்த நாட்டில் பல சாதனைகளை புறிந்தவர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆட்டத்தின் முதல் செட்டில் 29-28 என தீபிகா முன்னிலை வகித்தார். பின்னர் இரண்டாவது செட்டில் 28-28 என இருவரும் சமநிலை வகித்தனர். பிறகு மூன்றாவது செட்டினை மைக்கெல் க்ரூப்பன் 27-26 என்ற கணக்கில் வென்றார்.


பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 7-3 என்ற கணக்கில் தீபிகா குமாரி வெற்றி வாகை சூடினார்!