Worldcup 2023: உலக கோப்பைக்கு முன்னேற ஸ்காட்லாந்துக்கு பிரகாசமான வாய்ப்பு
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னேற ஸ்காட்லாந்து முன்பு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அந்த அணி எஞ்சியிருக்கும் கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இலங்கை அணியுடன் சேர்ந்து இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுவிடும்.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் 2 இடத்துக்கு இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடுகின்றன. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அந்த வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இலங்கை அணி தகுதி பெற்றுவிட்டது. எஞ்சியிருக்கும் ஒரு இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் போட்டிப் போடுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் வெளியேற்றம்
50 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெறுவதற்காக தகுதிச் சுற்றில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த தோல்வியுடன் அந்த அணி 50 ஓவர் உலக கோப்பைக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இலங்கை அணி உலகக் கோப்பைக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.இதனால் எஞ்சியிருக்கும் ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி போடுகின்றன. தகுதிச் சுற்று போட்டிகளை நடத்தும் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இனி வரும் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் அந்த ஒரு இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு வாய்ப்பு
ஜிம்பாப்வே ஜூலை 4 ஆம் தேதி (நாளை) ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. சூப்பர் சிக்ஸில் அந்த அணிக்கான கடைசி போட்டி இது. இந்த ஒரே ஒரு போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால், ஒருநாள் உலகக் கோப்பைக்கான இடத்தையும் உறுதி செய்யும். வெற்றிபெறவில்லை என்றால், ஜிம்பாப்வே தகுதிச் சுற்றின் மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.
ஸ்காட்லாந்து - நெதர்லாந்து போட்டி
ஸ்காட்லாந்து 4 புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸ் புள்ளிகள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாட உள்ள கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் எந்த பிரச்சசனையும் இல்லாமல் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுவிடும். நெதர்லாந்து அணியின் வாய்ப்பு கடினமாகவே உள்ளது. ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிராக அவர்கள் விளையாடும் கடைசி 2 போட்டிகளில் பெரிய வெற்றியை பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கான வாய்ப்பு குறைவு தான்.
மேலும் படிக்க | ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் வெளியேற்றம்: ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ