பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்த மாரியப்பன் தங்கவேலு கஷ்டத்திலும் சாதித்துள்ளார் என விரேந்திர சேவாக் புகழ்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் பங்கேற்றார் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. இந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார்.


பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதகம் வென்ற மாரியப்பனின் ஏழ்மை குறித்து விரேந்திர சேவாக் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்:-


மாரியப்பனின் சிறுவயதில் அவரது தந்தை கைவிட்டு சென்ற நிலையில், தாய் சரோஜா காய்கறி விற்பனை செய்து மாரியப்பனை வளர்த்து வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான சூழலில், அவரது தாய் மற்றும் மாரியப்பன் சிறுவயதிலிருந்து சிறு சிறு வேலைகளை பார்த்ததோடு, கடுமையான பயிற்சியை எடுத்து நாட்டிற்காக தங்கப்பதக்கம் வென்று பெருமை தேடி தந்திருக்கின்றார்.என மாரியப்பன் குறித்து பாராட்டியுள்ளார்.