அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் லாத்வியாவின் செவாஸ்டோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர், அமெரிக்காவின் குயின்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் செரினா வில்லியம்ஸ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.


அர்தர் ஆஷி அரங்கத்தில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் லாட்வியா வீராங்கனை அனஸ்டாசிஜா செவாஸ்டோவா உடன் மோதினார். ஆட்டம் துவங்கியதிலிருந்தே மிரட்டலாக புள்ளிகளைக் குவித்துவந்த செரினா இறுதியில், 6-3,6-0 என்ற நேர் செட்களில் லாட்வியா வீராங்கனையை எளிதாக வென்றார்.



இதன்மூலம் செரினா அமெரிக்க ஓபன் இறுதிசுற்றுக்கு 9 வது முறையாக முன்னேறியுள்ளார்.