அதிரடி மட்டையாளரான விரேந்திர சேவாக் தன் கிரிக்கெட் வாழ்வில் ஓரே ஒரு பவுலரின் பந்துவீச்சினை பார்த்து பயந்துள்ளதாக தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும், அதிரடி மட்டையாளருமான விரேந்திர சேவாக் சமீபத்தில் பிரபல உலவி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். இந்நிகழ்ச்சியில் தன் கிரிக்கெட் வாழ்வினை குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் தன் கிரிக்கெட் வாழ்வில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தரின் பந்துவீச்சினை பார்த்து பயந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


துணிச்சலான கிரிக்கெட் வீரர்களை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்திர சேவாக் ஆட்டத்தின் முதல் பந்தைக் கூட எவ்வித தயக்கமும் இன்றி சிக்சருக்கு தூக்கி அடித்துவிடுவார். 
 
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் இவர். ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் மட்டும் அல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 


வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் உள்பட இவருக்கு பந்து வீச பல வேகப்பந்து வீச்சாளர்கள் பயந்த கதைகள் உண்டு. இந்நிலையில் தற்போது சேவாக் தான் பார்த்து பயந்த வீரரை பற்றி தெரிவித்துள்ளார். 


பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோயப் அக்தரின் பந்து எப்போது நம் தலையில் படும், எப்போது நம் கால்களை பதம் பார்க்கும் என்று தெரியாது எனவே அவரது பந்தை எதிர்கொள்ள நான் பலமுறை பயந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 


இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு வீரரான அப்ரிடி தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட போது... விரேந்திர சேவாக்குக்கு பந்து வீசும் போது தான் நான் மிகவும் பயந்துள்ளேன். அவர் எப்போது எப்படி பந்தை பறக்க விடுவார் என தெரியாது என தெரிவித்தார்.