ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் சேன் வார்னே தாய்லாந்தின் அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக தனது 52 வயதில் இறந்தார்.  இது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.  ஷேன் வார்ன் 708 டெஸ்ட் விக்கெட்டுகளையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் ஷேன் வார்னின் அகால மரணம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். கிரிக்கெட்டில் வார்னின் பங்களிப்பு குறித்து கவாஸ்கர் பாராட்டு தெரிவித்தார், இருப்பினும் வார்னே எல்லா காலத்திலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அல்ல என்றும் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சுழற்பந்து மன்னன் ஷேன் வார்னின் கடைசி நிமிடங்கள்: விவரித்து வருந்திய நண்பர்


சமீபத்திய நேர்காணலில் பேசிய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "என்னைப் பொறுத்தவரை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் முத்தையா முரளிதரன் நிச்சயமாக வார்னை விட சிறந்தவர்கள். ஏனெனில் இந்தியாவுக்கு எதிராக வார்னின் சாதனையைப் பாருங்கள், இது மிகவும் சாதாரணமானது.  சுழல் பந்துவீச்சில் மிகச் சிறந்த வீரர்களான இந்திய வீரர்களுக்கு எதிராக அவர் அதிக வெற்றியைப் பெறாததால், அவரை நான் சிறந்தவர் என்று நினைக்கவில்லை. முத்தையா முரளிதரன் இந்தியாவுக்கு எதிராக செய்த சாதனையை பாருங்கள்.  ஃபிங்கர் ஸ்பின் மிகவும் எளிதானது, ஆனால் லெக் ஸ்பின் அல்லது ரிஸ்ட் ஸ்பின் மிகவும் கடினமானது. கிரிக்கெட் உலகம் முழுவதும் அவர் போற்றப்படுவதற்கு இதுவும் காரணம்" என்று கூறியுள்ளார்.  



கவாஸ்கரின் இந்த கருத்து, வார்னரின் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.  இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை பெரிதுபடுத்தி காமிக்க கவாஸ்கர் இந்த நேரத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பலர் கவாஸ்கருக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் இறந்ததைத் தொடர்ந்து வார்னின் மரணம் ஏற்பட்டது.  24 மணி நேர இடைவெளியில் நடந்த இந்த இரண்டு இறப்புகளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.  


மேலும் படிக்க | ஷேன் வார்ன் இறந்தது எப்படி? மருத்துவர்கள் தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR