முதல் ஒருநாள் போட்டி 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய அணி, 20 ஓவர் தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தி நாளை நடைபெற இருக்கிறது. 


மேலும் படிக்க | திருந்த மாட்டார்கள்! இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்!


ஷிகர் தவான் பேட்டி


ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்க இருக்கும் நிலையில் ஷிகர் தவான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, 20 ஓவர் தொடரில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் போட்டியிலாவது வாய்ப்பு கொடுப்பீர்களா? என கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த ஷிகர் தவான், " அணிக்கு என்ன தேவையோ அது சார்ந்து முடிவெடுக்கப்படும். சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நான் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் எதிர்கொண்டிருக்கிறோம். அத்தகைய தருணத்தில் பொறுமையாக இருப்பது அவசியம். 


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு 


ஒரு பிளேயர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுடன் உரையாடுவது அவசியம். நான் கூட இந்திய அணியில் இடம்பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. என்னுடைய அனுபவத்தையே அவர்களுக்கு உதாரணமாக கொடுக்க நினைக்கிறேன். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து வீரர்களுக்கும் இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என தெரிவித்தார்.


மேலும் படிக்க | ரொனால்டோவுக்கு பிறகு மான்செஸ்டர் கிளப்பில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ