தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, ஒருநாள் அணியில் ஷிகர் தவான் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தேர்வு செய்வதில் இந்திய தேர்வாளர்களுக்கு கேள்வி உள்ளது. மறுபுறம், இந்தியன் பிரீமியர் லீக்கிற்குப் பிறகு விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வெங்கடேஷ் ஐயர் அணியில் தேர்வு செய்வது கிட்டத்தட்ட உறுதியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ (BCCI) ஏற்கனவே நியமித்துள்ளது, ஆனால் அணியின் முழு விவரம் தற்போது வரை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பயோ-பபிள் மற்றும் பணிச்சுமை நிர்வாகத்தை மனதில் வைத்து 50 ஓவர் போட்டிக்கான அணியில் தேர்வாளர்கள் எத்தனை வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


ALSO READ | தலைகீழாக நின்று Wide குடுத்த அம்பயர்! வைரல் வீடியோ


கெய்க்வாட் அல்லது தவான்??
கெய்க்வாட் (Ruturaj Gaikwad) தற்போது வரை இலங்கையில் இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இன்னும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசப் போட்டிகளில் கூட, ரோகித் முதலிடத்தில் பேட்டிங் செய்ததாலும், இஷான் கிஷான் அவரது தொடக்கப் பங்காளியாக இருந்ததாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.


கெய்க்வாட் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக 136 ரன்களும், சத்தீஸ்கருக்கு எதிராக 154 ரன்களும், கேரளாவுக்கு எதிராக 124 ரன்களும் எடுத்துள்ளார், இது தேர்வாளர்களால் புறக்கணிக்க கடினமாக இருக்கும். மறுபுறம், தவான் இந்த காலகட்டத்தில் பூஜ்ஜியம், 12, 14, 18 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.


இதற்கிடையில் அஜின்கியா ரகானே, இஷாந்த் ஷர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளித்ததால் தவானுக்கும் (Shikhar Dhawan) மீண்டும் இந்த வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


“கடந்த முறை இந்தியா 50 ஓவர் தொடரில் விளையாடிய போது, ​​தவான் இந்தியாவை வழிநடத்தி, இலங்கையில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடினார். விறுவிறுப்பாகவும், ரன்களை குவிப்பதிலும் அவர் வல்லவர். இதனால் தவானுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.


ALSO READ | Ashes-ல் அசத்திய ஸ்டார்க்! இங்கிலாந்து 147க்கு ஆல் அவுட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR