’நல்லா விளையாடியும் இடமில்லை’ என்டு கார்டு போட்ட டிராவிட்.. விரக்தியில் தவான்!
INDvsSL: முதலில் 20 ஓவர் போட்டியில் இருந்து கழற்றிவிடப்பட்ட தவான் இப்போது இந்திய அணியின் ஒருநாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதால், அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஷிகர் தவானின் சர்வதேச கிரிக்கெட் பயணம் ஏறக்குறைய இறுதி அத்தியாயத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் இறங்கிய ஷிகர் தவான், சிறப்பாக விளையாடினார். ஆனால், 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்குப் பிறகு அவருக்கான இடம் இந்திய அணியில் கேள்விக்குறியானது. சீனியர்கள் விளையாடும் அணியில் இடம்பெறாத ஷிகர் தவானிடம், சுப்மான் கில், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் அடங்கிய இளம் அணியை வழிநடத்தும் பொறுப்பு தவானிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜிம்பாப்பே, அயர்லாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான இந்திய அணியை வழிநடத்திய ஷிகர் தவானுக்கு முதலில் 20 ஓவர் இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. அதாவது, இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியுடனான ஷிகர் தவானின் பயணம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு தவானிடம் கொடுக்கப்பட்டாலும், பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர் விளையாடவில்லை. இரண்டு மூன்று தொடர்களில் தவானிடம் இருந்து பெரிய ஸ்கோர் வராததால், இந்திய அணி நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. அதேநேரத்தில், அவருக்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு மூன்று தொடர்களில் அவர் விளையாடாதது உண்மை என்றாலும், தவானின் கிரிக்கெட் பயணம் முடிந்துவிட்டதாக தான் கருதவில்லை என கூறியுள்ளார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை இடது கை பேட்ஸ்மேனின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்துள்ளது என கூறியுள்ள அவர், இஷான் கிஷன் தவிர்க்க முடியாத காரணத்தால் விளையாடவில்லை என்றால் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார். காம்பீர், ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்திருக்கும் வரிசையில் தவானும் சிறப்பான பங்களிப்பை செய்திருப்பதை குறிப்பிட வேண்டும் என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். டிராவிட் வந்தபிறகே தவானுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ