இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் இன்று, இன்நாளில் மற்றொரு சிறப்பும் உண்டு! ஆம் இந்தியா-வின் நட்சத்திர் ஆட்டக்காரர் ஷிகார் தவான் பிறந்தளாலும் கூட...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடும் இவர், தனது கிரிக்கெட் பயனத்தில் புதிய மைல்கல்லை இன்றைய தினம் எட்டியுள்ளார்.


இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய நாள் ஆட்டத்தில், இடதுகை வல்லவன் ஷிகார் தவான், இன்றைய பிறந்தநாளினை நினைவில் வைத்துக்கொள்ளலும் படி சர்வதேச போட்டிகளில் 8000 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் தனது 5-வது அரை சதத்தினை எட்டியுள்ளார்.



இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஆட்டகாரராக இருக்கும் இவர், டெல்லியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குறிப்பிடத்தக்க ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்!