Viral Video: இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை சமீபத்தில் நிறைவு செய்தது. தொடர்ந்து, பும்ரா தலைமையிலான இளம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்பின், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிய கோப்பையின் மீதான எதிர்பார்ப்பு


இதற்கு முன் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரிலும் (50 ஓவர்), ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொடராக ஆசிய கோப்பை தொடர் உள்ளது. ஏனென்றால், ஆசிய கோப்பையில் விளையாடும் வீரர்கள் தான் பெரும்பாலும் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடுவார்கள். எனவே, ஆசிய கோப்பை தொடரை அனைத்து அணிகளுமே உற்றுப்பார்க்கின்றன. 


இதில், இந்திய அணியை போலவே பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களும் உலகக்கோப்பை தொடருக்கான தயாரிப்பை முன்கூட்டியே தொடங்கி உள்ளனர். ஆசிய கோப்பை தொடர் வரும் ஆக. 30ஆம் தேதி தொடங்கி செப். 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் கலவையாக நடத்தப்பட உள்ளது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட உள்ளது. 


மேலும் படிக்க | விராட் கோலிக்கு வைர கிரிக்கெட் பேட் கிப்ட் செய்த நபர்!


சிறந்த வாய்ப்பு 


இந்த ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடத்தப்படும் நிலையில், இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.


ஆசிய கோப்பை தொடர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடங்கும். பெரும்பாலான அணிகள் இறுதிக்கட்ட தயார்நிலையில் உள்ளன. ஆசிய அணிகளுக்கு, உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அவர்களது இறுதி அணியை சோதிக்க இந்தப் போட்டி ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 


வினோத பயிற்சி


இந்த தொடருக்கு ஒவ்வொரு வீரரும் வெவ்வேறு முறைகளில் தயாராகி வரும் நிலையில், வங்கதேச அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் ஷேக் முரட்டுத்தனமான ஒரு பயிற்சியில் இறங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவில் ஷேக் ஆசியக் 'மனநலப் பயிற்சியின்' ஒரு பகுதியாக நெருப்பில் நடப்பதை நீங்கள் காணலாம்.



இந்த வீடியோ சைஃப் அகமது என்பவரின் ட்விட்டர் (தற்போது X) கணக்கில் இருந்து வெளியிடப்பட்டது. இருப்பினும், அவர் இத்தகைய பயிற்சியில் ஈடுபடுவது மனநலத்தை ஒருநிலைப்படுத்தும் என்றும், மனதை திடமாக்கும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பும்ரா: மூவர் கூட்டணியில் சுருண்ட அயர்லாந்து - இந்திய அணி அபார பந்துவீச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ