விராட் கோலி சாப்பிடும் அரிசி விலை என்ன தெரியுமா...? கேட்டா அதிர்ச்சி ஆயிடுவிங்க!
Virat Kohli Fitness: இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி உண்ணும் அரிசியின் விலை மற்றும், அவரது உணவுமுறை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
Virat Kohli Fitness: 2008ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, அதே ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை தலைமை தாங்கி கோப்பையையும் கைப்பற்றி வந்தார்.
ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த விராட் கோலி, மிக விரைவிலேயே உலகின் நம்பர் 1 வீரராக மாறினார். சதத்தை மிக சாதரணமாக குவிக்க தொடங்கிய கோலி, சச்சினை விரைவில் முந்திவிடுவார் என அனைவரையும் பேசவைத்தார்.
பாரம்பரிய பேட்டர்களுக்கு உரித்தான ஷாட்களை ஆடுவதில் விராட் கோலி கில்லி என பெயரெடுத்தாலும், சேஸிங்கில் நிலைத்து நின்று ஆடி எதிரணியை கதிகலங்க வைப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. அந்த அளவிற்கு சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: தோனி கோப்பையை வெல்ல மாட்டார்: ஸ்ரீ சாந்த் வந்ததும் சொன்ன அதிரடி கருத்து
தொடர்ந்து, தோனிக்கு மூன்று பார்மட்களிலும் கேப்டனாக மாறிய விராட் இந்திய அணிக்கு புத்துயிர் ஊட்டினார். இவர் தலைமையில் எவ்வித ஐசிசி கோப்பைகளையும் இந்திய கைப்பற்றவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் முதல் பல சாதனைகளை அவர் புரிந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால், இந்திய அணிக்கு தகுதிபெறும் வீரர்களிடம் அவர் எதிர்பார்த்த பிட்னஸ்தான்.
வீரர்களிடம் தோனி முன்வைத்த பிட்னஸ் சற்று நெகிழ்வுத்தன்மை வாய்ந்தது என்றால், விராட் கோலி அதில் மிகவும் கறார் காட்டினார் எனலாம். அதற்கு சான்றாக தானும் பிட்னஸில் சிறந்திருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார். 34 வயதான தற்போது வரை, அவர் மிகவும் பிட்டாக இருப்பதற்கு காரணம் அவர் உடற்பயிற்சியில் காட்டும் தீவிரமும், உணவுமுறையில் மேற்கொள்ளும் கட்டுப்பாடும் தான் என கூறப்படுகிறது. அந்த வகையில், அவரின் உணவு பழக்க வழக்கம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தினமும் காலை எழுந்தவுடன் மூன்று அவித்த முட்டைகளை சாப்பிடுவார் என கூறப்படுகிறது. அவர் கார்போஹைட்ரேட்டை உணவில் எடுத்துக்கொள்ளவே மாட்டர். பால் சார்ந்த உணவுகள், சப்பாத்திகளை அவர் தொடவே மாட்டாராம். பிரட் சாப்பிட்டாலும், அதுவும் பிரத்யேகமான உணவு பொருளை பயன்படுத்தி செய்ததை மட்டுமே சாப்பிடுவார் என கூறப்படுகிறதுய
இதுமட்டுமின்றி, விராட் கோலி சாதரணமாக நாம் சாப்பிடும் அரிசிக்கு பதிலாக, வேறு வகையான அரிசியைதான் சாப்பிடுவார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அரிசி ஆலையில் தனியாக செயல்படுத்தப்படுகிறது. அந்த அரிசி குளூட்டன் இன்றி, கார்போஹைட்ரேட்ஸ் குறைவாக இருக்கும். ஆனால், சுவை சாதரணமாகவே இருக்கும். இந்த அரிசி ஒரு கிலோ ரூ. 400 - ரூ. 500 வரை இருக்கும் என கூறப்படுகிறது. பிட்னஸ்காக கோலி தனது தவமாய் தவமிருக்கிறார்.
அவர் இனிப்பு வகைகளை தொடவே மாட்டார். அவரின் இத்தனை ஆண்டுகள் சிறப்பான ஆட்டத்திற்கும், உடற்தகுதிக்கும் முக்கிய காரணம் விராட்டின் கறார்தான். இருப்பினும் விராட் கோலிக்கு என்று பிடித்த உணவும் உள்ளதாம். சோலே வெண்ணெய் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இருப்பினும், கிரிக்கெட்டுக்காக அதனை சாப்பிடுவதை குறைத்துள்ளார் என கூறப்படுகிறது.
விராட் நேற்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்திருந்தாலும், இந்திய அணி தோல்வியுற்று ஒருநாள் தொடரையும் இழந்தது. இதையடுத்து, வரும் ஜூன் 7ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது. அதில், விராட் கோலி இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: ஐபிஎல் தொடரையை தலைகீழாக மாற்றும் புதிய விதிகள்... முழு விவரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ