Bishan Singh Bedi Passes Away: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பாவனுமான பிஷன் சிங் பேடி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்திய அணிக்கு கேப்டனாகவும் இவர் செயல்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ஸ்பின் வரலாற்றில் முக்கியமானவர்


பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் பிறந்த பிஷன் சிங் பேடி, டெல்லி அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது விளையாட்டு வாழ்க்கையை தொடங்கி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 370 போட்டிகளில் 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய முதல் தர போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக பிஷன் சிங் பேடி உள்ளார். எரபள்ளி பிரசன்னா, பிஎஸ் சந்திரசேகர் மற்றும் எஸ். வெங்கடராகவன் ஆகியோருடன் இணைந்து பிஷன் சிங் பேடி, இந்தியாவின் சுழற்பந்துவீச்சு வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார்.


மேலும் படிக்க | 1983, 2011 உலகக் கோப்பை இரண்டும் இல்லை... இதுதான் இந்தியாவுக்கு ரொம்ப ஸ்பெஷல் - முழு விவரம்



முதல் ஓடிஐ வெற்றியில் பெரும்பங்காற்றியவர்


லெக் ஸ்பின்னரான இவர் இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற 1975ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கிழக்கு ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா அந்த வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் பிஷன் சிங் பேடி 12 ஓவர்கள் வீசி 6 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதில் 8 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதன்மூலம், முதலில் பேட்டிங் செய்த கிழக்கு ஆப்பிரிக்கா 120 ரன்களுக்கே ஆல்அவுட்டானது. மேலும், இந்திய அணியின் ஓப்பனர்கள் சுனில் கவாஸ்கர், பரூக் இன்ஜினியர் விக்கெட்டை இழக்காமல் இலக்கை அடைந்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். எஸ். வெங்கட்ராகவின் தலைமையில் 1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு உலகக் கோப்பையிலும் விளையாடிய இந்திய அணிக்கு இந்த ஒரே ஒரு வெற்றிதான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நேர்மையான மனிதர்


பிஷன் சிங் பேடி வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமில்லை, அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நேர்மைக்கு பெயர் போனவர். அவரது நேர்மை மற்றும் நேர்மையான அணுகுமுறை அவரை தலைசிறந்த நபராக மாற்றியது எனலாம். கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமான இந்த சமயத்தில், அவரது கிரிக்கெட் சார்ந்த அவரது திறமைக்காக மட்டுமல்லாமல், அவர் நிலைநாட்டிய மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்காகவும் நாம் நினைவுகூர வேண்டும். அவர் ஒரு சுழல் மந்திரவாதி மட்டுமல்ல, விளையாட்டின் நேர்மையான மனிதர். அவரின் மறைவுக்கு கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி பல தரப்பினரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | 1992 World Cup: 1 பந்தில் 22 ரன்கள்... தென்னாப்பிரிக்காவின் கனவை கலைத்தது மழையா... பேராசையா...?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ