நான் HIV பரிசோதனைக்கு சென்றேன்! உண்மையை வெளிப்படுத்திய ஷிகர் தவான்!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தன்னுடைய இளம் பருவத்தில் உடலில் பச்சை குத்தி கொண்ட பிறகு, எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதை பற்றி பேசியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது டீனேஜ் பருவத்தில் எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டது குறித்து பேசியுள்ளார். சிறுவயதில் தனக்கு உடலில் பச்சை குத்திக்கொள்வதில் மிகுதியான ஆர்வம் இருந்ததாகவும், அதற்காக தான் என்னவெல்லாம் செய்தேன் என்பதையும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் சிறு வயதில் பச்சை குத்தி கொண்டதற்காக தனது பெற்றோர்களிடம் அடி வாங்கியதையும் ஷிகர் தவான் நினைவு கூர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷிகர் தவான், "எனக்கு 14-15 வயது இருக்கும் போது, என் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் நான் மணாலிக்குச் சென்று, என் முதுகில் பச்சை குத்திக் கொண்டேன். அந்த பச்சையை யாருக்கும் தெரியாமல் சில காலங்களுக்கு மறைத்து வைக்க வேண்டியிருந்தது, ஒருவழியாக நான் பச்சை குத்தி கொண்டது 3-4 மாதங்களுக்கு பிறகு என் அப்பாவுக்குத் தெரிந்ததும் அவர் என்னை கடுமையாக அடித்தார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023: தமிழ் பாடலுக்கு நடனமாடிய தமன்னா - ராஷ்மிகா: பிரம்மாண்டமாக தொடங்கியது
பச்சை குத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஊசி எத்தனை பேரின் உடல்களில் குத்தப்பட்டு இருக்கும் என்பதை பச்சை குத்திய பிறகு யோசித்து நான் கொஞ்சம் பயந்தேன். அதன் பின்னர் நான் மருத்துவமனைக்கு சென்று எச்ஐவி பரிசோதனை செய்தேன், ஆனால் அதன் ரிசல்ட் நெகட்டிவாக வந்தது என்று சிரித்தபடி கூறினார்.
இடது கை தொடக்க ஆட்டக்காரரான இவர் நியூசிலாந்துக்கு எதிராக நவம்பர் 2022-ல் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தும் இவர் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். பிபிகேஎஸ் தனது முதல் போட்டியில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 1-ம் தேதி விளையாடவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 16-வது எடிஷன் மார்ச் 31 (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கியுள்ளது. சீஸனின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் அணி:
ஷிகர் தவான், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பிரார், சாம் குர்ரான் , சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோஹித் ரதீ, சிவம் சிங்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ