புதுடெல்லி: இந்தியாவின் ஷாட் புட் விளையாட்டு வீரர் தேஜிந்தர்பால் சிங் தூர் தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் குழு "ஏ" பிரிவு தகுதிச் சுற்றில் 19.99 மீ தூரம் மட்டுமே தூக்கி எறிந்து 13 வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று முயற்சிகளில் இரண்டு முறை தவறிழைத்தார் மற்றும் அவரது ஒலிம்பிக் பதக்க கனவு அங்கேயே முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை:
இந்தியாவின் சார்பில் ஆடவர் குண்டு எறிதலுக்கான போட்டியில் வீரர் தஜிந்தர்பால் சிங் இறுதிப் போட்டிக்கு செல்லும் தகுதியை இழந்தார். தகுதிச் சுற்றில் இருந்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 21.20 மீ தூரம் குண்டை எறிய வேண்டும். ஒருவேளை இவ்வளவு தூரம் வீரர்களால் ஏறிய முடியவில்லை என்றால், முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். 21.20 மீ தூரம் எறிந்த விளையாட்டு வீரர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.


ஆனால் தஜிந்தர் சிங்க்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது. ஆனால் அவரால் தகுதி மதிப்பெண்ணை அடைய முடியவில்லை. 


ALSO READ | Tokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா?


ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்த தஜிந்தர் சிங்:
தேஜீந்தர்பால் தனது முதல் முயற்சியிலேயே 19.99 மீ தூரம் எறிந்து 16 விளையாட்டு வீரர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். முதல் முயற்சியில் ஐந்து விளையாட்டு வீரர்கள் மட்டுமே 20 மீட்டருக்கு மேல் வீச முடிந்தது. இரண்டாவது முயற்சியில் தஜீந்தர்பால் சிங் வேகமாக சுழன்று குண்டை எறிந்தார். ஆனால் அது ஃபௌல் என அறிவிக்கப்பட்டது.


இறுதிப்போட்டி தகுதியை இழந்தார்:
பின்னர் மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியில் மீண்டும் தவறிழைத்தார் மற்றும் தகுதிச் சுற்றில் அவரது சிறந்த குண்டு எறிதல் 19.99 மீட்டர் ஆகும். இறுதிப்போட்டிக்கு செல்லும் அவரது கனவு தகர்ந்தது. மூன்று வாய்ப்புகளில் இரண்டு செல்லாததால் அவரால் தகுதி பெற முடியவில்லை.


தஜிந்தர்பால் சிங் குரூப் ஏ -வில் இருந்தார். தகுதிச்சுற்று ஷாட் புட் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 16 வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் தகுதி சுற்றில் மூன்று வாய்ப்புகளை பெற்றனர். 32 வீரர்களில் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.


ALSO READ | Tokyo Olympics: வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி


ஆசிய போட்டி-தங்கம் வென்றார்:
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR