இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது திடீரென பாம்பு மைதானத்திற்குள் புகுந்தது. இதனைக் கண்டு பதறிப்போன தென்னாப்பிரிக்க வீரர்கள், உடனடியாக நடுவரிடம் சென்று முறையிட்டனர். மிக நீளமான பாம்பு மைதானத்திற்குள் வந்தது ஊழியர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் ஊழியர்கள் பாம்பை பிடித்துச் சென்ற பிறகு தடைபட்டிருந்த போட்டி மீண்டும் தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுத்ததால் பின்னர் வந்த கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அதே ரிதத்தில் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பாம்பு மைதானத்திற்குள் வந்து சென்ற பிறகு இந்திய அணியின் ஆட்டம் இன்னும் அனல் பறக்கத் தொடங்கியது. 


மேலும் படிக்க |இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?



ரோகித் மற்றும் ராகுல் அவுட்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த கோலி - சூர்யகுமார் யாதவ் ஜோடி, வாண வேடிக்கைகளை காட்டினர். இதனால் 20 ஓவரில் இந்திய அணி 237 ரன்களை குவிக்க, பதிலுக்கு தென்னாப்பிரிக்காவும் சரவெடி வெடித்தது. அந்த அணியின் டேவிட் மில்லர் மற்றும் குயின்டன் டிகாக் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு, பவுண்டரிக்கும் சிக்சர்களுக்குமாக பறக்கவிட்டனர். ஒருகட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுவிடுமோ என்னும் அளவுக்கு கூட நினைக்கத் தோன்றியது. அந்தளவுக்கு அவர்கள் இருவரின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. 


முடிவில் 221 ரன்கள் குவித்த அந்த அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி வரும் 4 ஆம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்குப் பிறகு ஷிகர் தலைமையிலான இந்திய அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது தென்னாப்பிரிக்கா. 


மேலும் படிக்க | T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ