மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற BCCI-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் முன்மொழியப்பட்ட Asia XI vs World XI போட்டி 2020 மார்ச் மாதம் அகமதாபாத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட சர்தார் படேல் மைதானத்தில் நடைபெறும் என்பதை BCCI தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு முன்னணி இந்திய ஊடக நாளிதழின் கூற்றுப்படி, இப்போட்டிக்கு இப்போது ICC-யின் ஒப்புதல் மட்டுமே தேவைப்படுகிறது. போட்டி நடக்கும் மோட்டேரா மைதானத்தில் ரூ.700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது அதிகாரப்பூர்வமாக உலகின் மிகப்பெரிய மைதானமாக பார்க்கப்படுகிறது. 


இந்த மைதானம் ஆனது 110,000 திறன் கொண்டது, அதாவது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முந்தியுள்ளது, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படேல் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் தயாராக உள்ளது மற்றும் கண்காட்சி போட்டி அதன் தொடக்க போட்டியாக திரட்டப்பட்டுள்ளது.


இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த போட்டி பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் BCCI, ICC-யின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றால் அவரது தலையீடு மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் மைதானத்திற்கு அவர் பிரவேசம் செய்வதும் போட்டிக்கு மிகசிறந்த ஒரு விளம்பரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


குறித்த இந்த விளையாட்டு மைதானமானது தற்போது விளையாட்டு வளாகங்களில் விளையாட்டு முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்து பயிற்சி பெற அதிநவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.


BCCI-ன் இந்த முயற்சி வெற்றிபெற்றுவிட்டால், BCCI தலைவராக சவுரவ் கங்குலியின் தொப்பியில் இது மற்றொரு அம்சமாக அமையும். இதுவரை 6 வாரங்கள் மட்டுமே பொறுப்பேற்றுள்ள கங்குலி, அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்தன் மூலம் பாராட்டு மழையில் நனைந்தார். இந்நிலையில் தற்போது Asia XI vs World XI போட்டி அவரது மற்றொரு இலக்காக பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், BCCI தலைவராக சவுரவ் கங்குலியின் பதவிகாலம் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த முடிவு BCCI-யின் 88-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது, எனினும் இதை செயல்படுத்த உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தகவல் அளித்து, ஒரு உயர் அதிகாரி, முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது அவை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.