உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவது சவாலாக இருக்கும்: கங்குலி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவது தனக்கு சவாலாக இருக்கும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மும்பை: மிகப்பெரிய கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. தேர்தல் செயல்முறை முடிவதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே சவுரவ் கங்குலி தேர்வு நிச்சயம் என செய்திகள் வரத்தொடங்கி உள்ளன. அதுக்குறித்து பேசிய கங்குலி "உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவது தனக்கு சவாலாக இருக்கும். இது தவிர, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் நிதி நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அக்டோபர் 23 ஆம் தேதி பி.சி.சி.ஐ பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன, இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் (அக்டோபர் 14) நிறைவடைகிறது. நாடு முழுவதும் மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகளின் கூட்டங்கள் டெல்லி மற்றும் மும்பையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தன. அந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலியின் பெயரும், அதேபோல ஐ.பி.எல் போட்டியின் தலைவராக பிரஜேஷ் படேல் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இதுக்குறித்து கங்குலி கூறுகையில், "இந்த பதவிக்கு என்னை பரிந்துரை செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் பி.சி.சி.ஐ.யின் நிர்வாகம் நன்றாக இல்லலை என்பதே நிதர்சனம். அதை சரிசெய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், பி.சி.சி.ஐ நடத்துவது பெரிய பொறுப்பு. ஏனெனில் அது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனமாகும். என்று கங்குலி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை கங்குலியைத் தவிர, பிரஜேஷ் படேல் மற்றும் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோரும் தலைவர் பதவிக்கான போட்டியில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் கங்குலி தான் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். கங்குலி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரால் 2020 ஜூலை வரை மட்டுமே அவர் பதவியில் இருக்க முடியும்.
ஏனென்றால் பி.சி.சி.ஐபின் புதிய விதிமுறைகளின்படி ஒரு நபர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மட்டுமே நிர்வாக பதவியில் இருக்க முடியும். அவர் தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.