Ashes-ல் அசத்திய ஸ்டார்க்! இங்கிலாந்து 147க்கு ஆல் அவுட்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
1890ம் ஆண்டு முதல் இன்று வரை வெற்றிகரமாக நடைபெற்று வரும் தொடர் ஆஷஸ். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் இந்த தொடருக்காக எப்போதும் காத்து கொண்டு இருப்பர். அந்த வகையில் 2021-22 ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெயின் பாலியல் குற்றசாட்டு காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஆஷஸ் தொடர் தொடங்கும் இந்த சமயத்தில் இது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்பு புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் பொறுப்பேற்று கொண்டார்.
கப்பாவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் ஓவரை வீசிய ஸ்டார்க் முதல் பந்திலேயே அசத்தலான யார்க்கரின் மூலம் ரோரி பர்ன்ஸ்
விக்கெட்டை வீழ்த்தினார். அவர் மட்டும் இன்றி ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் வேகத்தில் மிரட்ட இங்கிலாந்து அணி தடுமாறியது. அதிகம் எதிர்பார்க்கபட்ட ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒல்லி போப் மற்றும் ஜோஸ் பட்லர் கூட்டணி சிறிது நேரம் ஜோடி சேர்ந்து விளையாடியது. ஆனாலும் அவர்களின் ஆட்டம் அணிக்கு வலு சேர்க்கவில்லை. 147 ரன்களில் 10 விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதன்பின்பு மழையின் காரணமாக இன்றைய நாள் ஆட்டம் முடிவு பெற்றது. நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா பேஸ்ட்மேன்களின் விக்கெட்களை எடுக்க இங்கிலாந்து அணியின் பவுலர்கள் தயாராக உள்ளனர்.
ALSO READ | 2006 ஆம் ஆண்டே ஓய்வு முடிவு எடுத்த ’தோனி’ - வெளியான ருசிகர தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR