2022 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் இந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதுவரை மழையால் ஏராளமான போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில், விநோதமாக, சூரியனின் அதிக வெளிச்சத்தால் இந்தப் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. அதாவது, சூரியனின் அதிகபட்ச வெளிச்சதால், ஸ்டிரைக்கர் என்டில் நின்ற பேட்ஸ்மேனால் விளையாட முடியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, ஸ்டிரைக்கர் என்டில் இருந்த சுசி பேட்ஸ், சூரிய ஒளி கண்களை கூசுவதாக அம்பயரிடம் தெரிவித்தார். அம்பயரும் இதனை அனுமதித்ததால் சிறிது நேரம் போட்டி தடைபட்டது. பீல்டிங் அணி இது குறித்து விளக்கம் கேட்டபோதும்கூட, நான் பந்தை பார்த்தால் தான் விளையாட முடியும் என சுசி பேட்ஸ் சமயோசித்தமாக பதில் அளித்தார். 


மேலும் படிக்க | பாகிஸ்தான் அதிரடி! முடிவுக்கு வருகிறதா இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்?


இந்தப் போட்டியில், தஹிலா மெக்ராத் தலைமையிலான ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்ட்ரைக்கர்ஸ் அணியால் பட்டத்தை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த முறை கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் சாம்பியன்களாக மாறினர். 



டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் அணி, 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகளின் டீன்ட்ரா டோட்டின், 37 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


வெளிச்சதால் கிரிக்கெட் போட்டி நிறுத்தபடுவது இது முதன்முறை அல்ல. 2019 ஆண்டு நேப்பியரில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து போட்டியின்போதும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 2020 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியபோதும் அதிக வெளிச்சத்தால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. 


மேலும் படிக்க | உலகக்கோப்பையில் அசத்தும் ஆசிய அணிகள்! உலக இதயங்களை வென்ற ஜப்பான் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ