ரோகித், விராட் கோலிக்கு சலுகை எதற்கு? சரமாரியாக விளாசிய கவாஸ்கர்
ரோகித் மற்றும் விராட் கோலி உள்ளிட்ட சீனியர் பிளேயர்களுக்கு எதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 ஓவர் உலககோப்பை அரையிறுதி படுதோல்விக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றது. ஒருநாள் போட்டியை இழந்தது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட சீனியர் பிளேயர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அனுப்பப்பட்டது. இப்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ரோகித், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் கடுமையாக விளாசியுள்ளார்.
மேலும் படிக்க | வெறும் 90 ரன்களில் சதத்தை தவறவிட்ட ரிஷப் பன்ட்! இணையவாசிகளின் பாய்ச்சல்
சீனியர் பிளேயர்களுக்கு எதற்காக ஓய்வு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், அவர்களை தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பை இருக்கும்போது, ஒரு அணியாக அனைவரும் தொடர்ச்சியாக இணைந்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தவறுகளை சரியாக அடையாளம் கண்டு, அதனை அடுத்தடுத்த போட்டிகளில் திருத்திக் கொள்ள முடியும். பார்ட்னர்ஷிப் உருவாவதும், வீரர்கள் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து விளையாடும்போது மட்டுமே இருக்கும்.
பிளேயர்கள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருந்தால், நிலையான அணியாக இருக்காது. அவர்களால் எப்படி விளையாடுவது? நிலைத்தன்மை உருவாக்குவது எப்படி? போன்ற விஷயங்கள் பெரும் பின்னடைவாகவும், குழப்பமாகவும் இருக்கும். இதனால், சீனியர் பிளேயர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்கவே கூடாது. காயம் அடைந்த வீரர்களை தவிர்த்து மற்ற பியேளர்கள் எல்லா தொடரிலும் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு அணி ஐசிசி தொடர்களில் தோற்பது மிகப்பெரிய கேவலம். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்ட வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தோனிக்குப்பிறகு சிஎஸ்கே கேப்டன் இவரா? ஜடேஜா இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ