ஸ்ரீலங்கா தொடரில் இருந்து முக்கிய வீரர்கள் விலகல்!
ஸ்ரீலங்காவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் விலகி உள்ளனர்.
காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஸ்ரீலங்காவிற்கு எதிரான டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியது.
மேலும் படிக்க | ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி!
இந்நிலையில் இந்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பீல்டிங் செய்யும் போது சூரியகுமார் யாதவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் குறைந்தது மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் தீபக் சாஹருக்கு தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் நேரடியாக அடுத்து ஐபிஎல் போட்டிகளில் சாஹர் விளையாட உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி டி20 போட்டியில் சூர்யாகுமார் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து 37 பந்துகளில் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. பயோ பபில் காரணமாக இந்த இரண்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இது கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் டி20 தொடங்கவுள்ளது. அடுத்த இரண்டு டி20 போட்டிகள் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும்.
இந்திய T20I அணி: ரோஹித் சர்மா (C), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (WK), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அவேஷ் கான்.
மேலும் படிக்க | இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகிறாரா முகமது ஷமி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR