ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில் குமார், 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நடைப்பெற்ற 74கிலோ பிரிவு போட்டியில் இவர் ஜித்தேந்தர் குமாரினை தோற்கடித்ததன் மூலம் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


கிளாஸ்கோவில் நடைப்பெற்ற 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, தற்போது இவர் இந்த வருடம் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று தனது திறனை மீண்டும் நிறுபித்துள்ளார்.


காயம் காரணமாக, 2015 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக தகுதி போட்டிகளில் இவரால் பங்கேற்க முடியவில்லை, இந்நிலையில், கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 



இதனையடுத்து, தற்போது 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றுள்ளார்.