T20 World Cup இந்திய-பாகிஸ்தான் போட்டி பற்றி சவுரவ் கங்குலி கருத்து
இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தும் 2021 டி 20 உலகக் கோப்பை அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவிருக்கிறது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த உலகக்கோப்பைப் போட்டிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஓமன் மற்றும் பப்புவா கினியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நீண்ட காலத்திற்கு பிறகு நடைபெறுவதால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாக உள்ளது. அக்டோபர் 24 அன்று இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது
அக்டோபர் 23 ஆம் தேதி ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போட்டிகளுடன் சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. அந்தச் சுற்றில் அக்டோபர் 24 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆட்டத்தை தொடங்குகிறது.
READ ALSO | உலக கோப்பை போட்டிக்கான புதிய Jersey வெளியானது!
இந்த நிலையில் டி 20 உலகக் கோப்பையில் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2007 டி 20 உலகக் கோப்பைப்ப் போட்டிகள் பற்றி பலரும் குறிப்பிட்டு, இந்திய அணி மீண்டும் சாதிக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து வருகின்றனர்.
இதே போட்டி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வென்று வாகை சூடியது. "2007 டி 20 உலகக் கோப்பையின் முழுப் போட்டியும் எங்கள் கனவுகளை நனவாக்கிய போட்டித்தொடர் அது” என்று கங்குலி சிலாகித்துச் சொல்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைக்கும் ஆதரவு, உலகில் வேறு எந்த விளையாட்டு அணியும் பெற முடியத ஒன்று என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சனிக்கிழமை (அக்டோபர் 16, 2021) தெரிவித்தார்.
ALSO READ | T20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் விதிகளில் மாற்றம் செய்யப்படும் - ICC
இந்தியாவில் கிரிக்கெட் மதம்
ஆன்லைனில் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, ”இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மிகப்பெரிய பக்தர்கள். அவரது தொடர்ச்சியான ஆதரவும், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர்களைப் பின்பற்றும் ஆர்வமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நம் தேசத்தை ஒன்றிணைக்கும் ஒரு தேசிய ஆர்வமாக கிரிக்கெட்டை சொல்லலாம். இந்திய அணியின் வீரர் மற்றும் கேப்டன் என்ற முறையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைக்கும் ஆதரவு உலகெங்கிலும் உள்ள எந்த விளையாட்டு அணிக்கும் கிடைக்காதது என்று என்னால் நிச்சயமாக கூற முடியும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, புகழ்பெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியைப் பற்றி பேசிய அஜித் அகர்கர், உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும்போதெல்லாம், அதற்கான ஆர்வம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறார். இந்திய அணியின் வடிவம் மற்றும் வியூகத்தை ஒப்பிடும்போது, பாகிஸ்தான் அணியால் இந்தியாவை எதிர்கொள்வது சற்று கடினமானது என்று கூறினார்.
எது எவ்வாறாயினும், கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, எந்த நேரத்திலும், அதிலும் குறிப்பாக டி -20 வடிவத்தில் விஷயங்கள் திடீரென மாறும் என்பதால் எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது என்று அகர்கர் கூறியிருந்தார்.
Also Read | டி20 2021 உலக கோப்பையில் DRS பயன்படுத்தப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR