ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 2 முதல் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கிறது. அமெரிக்க நாட்காட்டியின் படி ஜூன் 1 ஆம் தேதி போட்டிகள் தொடங்கும் நிலையில், இந்தியாவில் ஜூன் 2 ஆம் தேதியாக இருக்கும். அதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டி எப்போது?, எங்கு பார்ப்பது என்று பெரும்பாலான ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகள் மொத்தம் 9 மைதானங்களில் நடக்க உள்ளது. இதில் ஆறு மைதானங்கள் வெஸ்ட் இண்டீஸிலும், 3 மைதானங்கள் அமெரிக்காவிலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பார்படாஸ், கயானா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் டிரினிடாட் டொபாகோ, கிரெனடைன்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.


உலக கோப்பையில் அணிகளின் குழுக்கள்


இந்த உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று இருக்கும் நிலையில், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 


குழு A: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
குரூப் பி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
குழு சி: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
குழு D: தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்


டி20 உலக கோப்பை போட்டி எப்படி நடக்கும்?


ஒவ்வொரு பிரிவில் இருக்கும் அணிகளும் தங்களுக்குள்ளாக நேருக்கு நேர் மோதிக் கொள்ளும். இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும்.  இதில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் டாப் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 20 அணிகளுக்கு இடையில் மொத்தம் 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 


குரூப் போட்டிகள்: ஜூன் 2 முதல் 17 வரை
சூப்பர் 8 நிலை: ஜூன் 19 முதல் 24 வரை
அரையிறுதி: ஜூன் 26 மற்றும் 27
இறுதிப்போட்டி: ஜூன் 29 சனிக்கிழமை, ரிசர்வ் நாள்: ஜூன் 30


* அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கும் ரிசர்வ் நாள் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க |  மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்


உலகக் கோப்பையில் எந்த 20 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன?


டி20 உலக கோப்பையை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவைத் தவிர, 2022 உலகக் கோப்பை சீசனில் விளையாடிய இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய டாப் 8 அணிகள் நேரடியாக இந்த உலக கோப்பை விளையாட தகுதி பெற்றன. ஐசிசி டி20 தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் டி20 உலக கோப்பை விளையாட தகுதி பெற்றன. இவை தவிர, தகுதி சுற்றுகள் மூலம் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன. 


டி20 உலகக் கோப்பையில் இதுவரை சாம்பியன்கள்


டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 சீசன்கள் நடந்துள்ளன. அதில் 6 அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016), இங்கிலாந்து (2010, 2022) ஆகிய அணிகள் தலா 2 முறை பட்டம் வென்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 1 முறை பட்டத்தை வென்றுள்ளன.


இந்திய அணியின் போட்டிகள் எந்த நேரத்தில் நடக்கும்?


இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் இரவு 8 மணிக்கு இந்தியாவில் ஒளிபரப்பாகும்.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டி20 உலக கோப்பை 2024 தொடரின் அனைத்து போட்டிகளையும் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும். மொபைல் யூசர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.


டி20 உலகக் கோப்பையின் அனைத்து 55 போட்டிகளின் அட்டவணை:


1. ஜூன் 2 - அமெரிக்கா vs கனடா, டல்லாஸ், காலை 6 மணி
2. ஜூன் 2 - வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா, கயானா, இரவு 8 மணி
3. ஜூன் 3 - நமீபியா vs ஓமன், பார்படாஸ், காலை 6 மணி
4. ஜூன் 3 - இலங்கை vs தென்னாப்பிரிக்கா, நியூயார்க், இரவு 8 மணி
5. ஜூன் 4 - ஆப்கானிஸ்தான் vs உகாண்டா, கயானா, காலை 6 மணி
6. ஜூன் 4 - இங்கிலாந்து எதிராக ஸ்காட்லாந்து, பார்படாஸ், இரவு 8 மணி
7. ஜூன் 4 - நெதர்லாந்து vs நேபாளம், டல்லாஸ், இரவு 9 மணி
8. ஜூன் 5- இந்தியா vs அயர்லாந்து, நியூயார்க், இரவு 8 மணி
9. ஜூன் 6- பப்புவா நியூ கினியா vs உகாண்டா, கயானா, காலை 5 மணி
10. ஜூன் 6- ஆஸ்திரேலியா vs ஓமன், பார்படாஸ், காலை 6 மணி
11. ஜூன் 6 - அமெரிக்கா எதிராக பாகிஸ்தான், டல்லாஸ், இரவு 9 மணி
12. ஜூன் 7 - நமீபியா vs ஸ்காட்லாந்து, பார்படாஸ், மதியம் 12.30
13. ஜூன் 7 - கனடா vs அயர்லாந்து, நியூயார்க், இரவு 8 மணி
14. ஜூன் 8 - நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான், கயானா, காலை 5 மணி
15. ஜூன் 8- இலங்கை vs பங்களாதேஷ், டல்லாஸ், காலை 6 மணி
16. ஜூன் 8 - நெதர்லாந்து vs தென்னாப்பிரிக்கா, நியூயார்க், இரவு 8 மணி
17. ஜூன் 8 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, பார்படாஸ், இரவு 10.30
18. ஜூன் 9 - வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா, கயானா, காலை 6 மணி
19. ஜூன் 9- இந்தியா vs பாகிஸ்தான், நியூயார்க், இரவு 8 மணி
20. ஜூன் 9- ஓமன் vs ஸ்காட்லாந்து, ஆன்டிகுவா, இரவு 10.30
21. ஜூன் 10 - தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ், நியூயார்க், இரவு 8 மணி
22. ஜூன் 11- பாகிஸ்தான் vs கனடா, நியூயார்க், இரவு 8 மணி\
23. ஜூன் 12- இலங்கை vs நேபாளம், புளோரிடா, காலை 5 மணி
24. ஜூன் 12 - ஆஸ்திரேலியா எதிராக நமீபியா, ஆன்டிகுவா, காலை 6 மணி
25. ஜூன் 12 - அமெரிக்கா எதிராக இந்தியா, நியூயார்க், இரவு 8 மணி
26. ஜூன் 13 - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, டிரினிடாட், காலை 6 மணி
27. ஜூன் 13- பங்களாதேஷ் vs நெதர்லாந்து, செயின்ட் வின்சென்ட், இரவு 8 மணி
28. ஜூன் 14- இங்கிலாந்து vs ஓமன், ஆன்டிகுவா, மதியம் 12.30
29. ஜூன் 14 - ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா, டிரினிடாட், காலை 6 மணி
30. ஜூன் 14 - அமெரிக்கா எதிராக அயர்லாந்து, புளோரிடா, இரவு 8 மணி
31. ஜூன் 15 - தென்னாப்பிரிக்கா vs நேபாளம், செயின்ட் வின்சென்ட், காலை 5 மணி
32. ஜூன் 15 - நியூசிலாந்து vs உகாண்டா, டிரினிடாட், காலை 6 மணி
33. ஜூன் 15- இந்தியா vs கனடா, புளோரிடா, இரவு 8 மணி
34. ஜூன் 15 - நமீபியா vs இங்கிலாந்து, ஆன்டிகுவா, இரவு 10.30
35. ஜூன் 16 - ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து, செயின்ட் லூசியா, காலை 6 மணி
36. ஜூன் 16- பாகிஸ்தான் vs அயர்லாந்து, புளோரிடா, இரவு 8 மணி
37. ஜூன் 17 - பங்களாதேஷ் vs நேபாளம், செயின்ட் வின்சென்ட், காலை 5 மணி
38. ஜூன் 17 - இலங்கை vs நெதர்லாந்து, செயின்ட் லூசியா, காலை 6 மணி
39. ஜூன் 17 - நியூசிலாந்து vs பப்புவா நியூ கினியா, டிரினிடாட், இரவு 8 மணி
40. ஜூன் 18 - வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான், செயின்ட் லூசியா, காலை 6 மணி
41. ஜூன் 19 - A2 vs D1, ஆன்டிகுவா, இரவு 8 மணி
42. ஜூன் 20 - B1 vs C2, செயின்ட் லூசியா, காலை 6 மணி
43. ஜூன் 20 - C1 vs A1, பார்படாஸ், இரவு 8 மணி
44. ஜூன் 21 - B2 vs D2, ஆன்டிகுவா, காலை 6 மணி
45. ஜூன் 21 - B1 vs D1, St Lucia, 8 PM
46. ​​ஜூன் 22 - A2 vs C2, பார்படாஸ், காலை 6 மணி
47. ஜூன் 22 - A1 vs D2, ஆன்டிகுவா, இரவு 8 மணி
48. ஜூன் 23 – C1 vs B2, St Vincent's, 6 am
49. ஜூன் 23 - A2 vs B1, பார்படாஸ், இரவு 8 மணி
50. ஜூன் 23 - C2 vs D1, ஆன்டிகுவா, காலை 6 மணி
51. ஜூன் 24 - B2 vs A1, St Lucia, 8 PM
52. ஜூன் 25 – C1 vs D2, St Vincent's, 6 am
53. ஜூன் 27 - அரை 1, கயானா, காலை 6 மணி
54. ஜூன் 27 - அரை 2, டிரினிடாட், இரவு 8 மணி
55. ஜூன் 29 - இறுதி, பார்படாஸ், இரவு 8 மணி


மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு சீரிஸிலும் அதிக ரன்களை அடித்த வீரர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ