எவ்வளவு நெருக்கடி வந்தாலும் T20 World Cup தொடரில் பங்கேற்போம்: ஆப்கானிஸ்தான் அணி!
நாங்கள் டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவோம். எங்கள் நாட்டில் போராட்டம் நடந்து வருகின்றன. ஆனால் அடுத்த சில நாட்களில் காபூலில் அணியின் வீரர்கள் பயிற்சிக்கு திரும்புவார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள தற்போதைய குழப்பத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கிரிக்கெட் அணி தொடர்ந்து விளையாடுமா அல்லது வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பையில் (2021 ICC Men's T20 World Cup) பங்கேற்குமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் எதிர்காலம்:
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சமூகரீதியாக மட்டுமல்லாமல், அந்த நாட்டின் விளையாட்டு அமைப்புக்கும் ஒரு பெரிய பின்னடைவாகும்.
இது கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச அரங்கில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி (Afghanistan National Cricket Team) முன்னேற்றத்தை அடைந்துள்ளது, இருப்பினும், இப்போது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் எதிர்காலம் தெளிவில்லாமல் உள்ளது.
ALSO READ | உலக கோப்பை கிரிக்கெட்: 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி
எங்கள் நாட்டில் நெருக்கடி மற்றும் பிரச்சனைகள் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துபாயில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை 2021 தொடரில் பங்கேற்கும் மற்றும் அதற்காக அணி தயாராக இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
எங்கள் வீரர்களுக்கு உதவ எப்போதும் தயாராகவே இருக்கிறோம்:
ஏஎன்ஐ உடன் பேசிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஊடக மேலாளர் ஹிக்மத் ஹாசன் (Hikmat Hassan), 'டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
மேலும் பேசிய அவர், ஆமாம், நாங்கள் டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவோம். எங்கள் நாட்டில் போராட்டம் நடந்து வருகின்றன. ஆனால் அடுத்த சில நாட்களில் காபூலில் அணியின் வீரர்கள் பயிற்சிக்கு திரும்புவார்கள்.
மேலும், டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களுக்கான பயிற்சியை அதிகரிக்கும் பொருட்டு உள்நாட்டு டி 20 போட்டியை நாங்கள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்று ஹசன் கூறினார்.
ALSO READ | ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி; ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
தற்போது நாட்டில் இல்லாததால் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் ரஷீத் கான் (Rashid Khan) அல்லது முகமது நபியுடன் (Mohammad Nabi) பேசினீர்களா என்று கேட்டதற்கு, அவர் கூறினார், "நாங்கள் எங்கள் வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவ எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அவர்களுக்கு முடிந்ததை நாங்கள் செய்வோம். காபூல் அதிகம் பாதிக்கப்படவில்லை, நாங்கள் ஏற்கனவே அலுவலகத்திற்கு திரும்பிவிட்டோம், அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை. " என்றார்.
அக்டோபர் 17 ம் தேதி முதல் நவம்பர் 14 ம் தேதி வரை:
இந்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி ஐக்கிய அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்க உள்ளது. துபாய், அபுதாபி மற்றும் சார்ஜாவில் அக்டோபர் 17 ம் தேதி முதல் நவம்பர் 14 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேரடியாக தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி:
2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி அணி தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி (T20 World Cup Qualifier) பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு இடங்களுக்கு தகுதி சுற்று நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்றில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாட தகுதி பெரும்.
ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. அந்த னி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. அதாவது குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இடம் பெறவுள்ளது.
ALSO READ | தாலிபன் அரசுக்கு ஆதரவாக நட்புக்கரம் நீட்டும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR