TNPL 2021 Schedule: ஐபிஎல் லீக் போலவே தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு TNPL தொடர் நடத்தப்படவில்லை. இந்த வருடம் ஜூன் மாதம் டிஎன்பிஎல் தொடர் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக தள்ளிப்போனது. இந்தநிலையில் டிஎன்பிஎல் தொடர் வரும் 19 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.  டிஎன்பிஎல் 5-வது சீசனில் 28 லீக் போட்டிகள், 4 பிளே-ஆப்கள், 1 பைனல் என மொத்தம்  33 போட்டிகள் நடைபெற உள்ளன. கொரோனா தொற்று (Coronavirus) காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசிடமிருந்து அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்னர், போட்டிக்கான அட்டவணை (TNPL 2021 schedule) வெளியிடப்பட்டது. பார்வையாளர்கள் மைதானத்திற்கு செல்லல அனுமதி கிடையாது. எட்டு அணிகளும் கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies), லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings), திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons), திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors), திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans), மதுரை பாந்தர்ஸ் (Madurai Panthers), நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings) என எட்டு நகரங்களை மையமாகக் கொண்ட அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.


ALSO READ | டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 3 கோடி பரிசு: டெல்லி அரசு அதிரடி


ஒரே ஆட்டம் நடைபெறும் நாளில் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு (TNPL 2021 Timings)தொடங்கும். அதேபோல இரண்டு போட்டிகள் நடைபெறும் நாளில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கும் மற்றும் இரவு 7.30 மணிக்கும் என போட்டி தொடங்கும்.


டி.என்.பி.எல் 2021 தொடரின் முழு அட்டவணை:
19-07-21 : கோவை vs சேலம்
20-07-21 : சென்னை vs திருப்பூர்
21-07-21 : நெல்லை vs திருச்சி 
22-07-21 : திண்டுக்கல் vs மதுரை 
23-07-21 : திருச்சி  vs கோவை
24-07-21 : சென்னை vs நெல்லை 
24-07-21 : திருப்பூர் vs சேலம்
25-07-21 : மதுரை vs திருச்சி 
25-07-21 : கோவை vs திண்டுக்கல்
26-07-21 : நெல்லை vs திருப்பூர்
27-07-21 : திண்டுக்கல்  vs திருச்சி 
28-07-21 : சேலம் vs சென்னை 
28-07-21 : மதுரை vs கோவை
29-07-21 : திருச்சி vs திருப்பூர்
30-07-21 : திண்டுக்கல் vs சேலம்
31-07-21 : கோவை vs திருப்பூர்
31-07-21 : மதுரை vs நெல்லை 
01-08-21 : சேலம் vs திருச்சி
01-08-21 : சென்னை vs திண்டுக்கல் 
02-08-21 : திருப்பூர் vs மதுரை
03-08-21 : நெல்லை vs திண்டுக்கல்
04-08-21: மதுரை vs சென்னை 
05-08-21 : சேலம் vs நெல்லை 
06-08-21 : சென்னை vs கோவை
07-08-21 : திருப்பூர் vs திண்டுக்கல்
07-08-21 : சேலம் vs மதுரை 
08-08-21 : கோவை vs நெல்லை 
08-08-21 : திருச்சி vs சென்னை 


ALSO READ | Friendship: தோல்வியில் துவளும் நெய்மரை கட்டியணைத்து ஆறுதல் கூறும் மெஸ்ஸி


 



ப்ளேஆஃப் அட்டவணை விவரம்:


10-8-2021 (இரவு 7.30) - தகுதி 1


11-8-2021 (இரவு 7.30) - எலிமினேட்டர்


13-8-2021 (இரவு 7.30) - தகுதி 2


15-8-2021 (இரவு 7.30) - இறுதி


டி.என்.பி.எல் போட்டிகள் டிவி மற்றும் ஆன்லைன் பார்க்கலாம்: 
அனைத்து போட்டிகளையும் ஸ்டார் இந்தியா ஒளிபரப்பவுள்ளது. நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் அவர்களின் ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பப்படும்.. அதேபோல OTT தளமான ஹாட்ஸ்டாரில் (Hot Star) நேரடியாக ஒளிபரப்பப்படும்.


ALSO READ | தோனி ரன் அவுட் ஆன தினம் இன்று. நடந்தது என்ன? தவறு எங்கே நடந்தது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR