ஆசிய கோப்பை 2022: ஆகஸ்ட் 27 முதல், ஆசிய கோப்பை 2022 போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மண்ணில் தொடங்க உள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி மிகப்பெரிய எதிராளியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் இந்திய அணி, ஒரு வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர் இருந்திருந்தால் இன்னும் இந்திய அணி பலமாக இருந்திருக்கக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் அந்த வீரர்?


ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. விக்கெட் கீப்பர் மற்றும் சிறந்த பேட்டிங் என இரண்டு ரோல்களில் பங்களிப்பு செய்யக்கூடிய அவரை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை. 


மேலும் படிக்க | மந்திரம் எல்லாம் சொல்ல மாட்டேன்.. ஒழுங்காக விளையாடுங்கள்; ரோகித் சர்மா சுளீர்


சிறப்பான பேட்டிங்


சஞ்சு சாம்சன் தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில், சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் சூப்பராக சிக்ஸர் அடித்தார். 


மேட்ச் வின்னர்


சஞ்சு சாம்சன் மிகப்பெரிய மேட்ச் வின்னர் வீரர்களில் ஒருவர். டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் சிறந்த முறையில் வீரர்களை தயார்படுத்த முயற்சித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரை மிடில் ஆர்டருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 20 ஓவர் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் வீரர்களில் இவரும் இருப்பதால், பிசிசிஐ பரிசீலிக்கலாம்.  


மேலும் படிக்க | ஜிம்பாப்வே பவுலர் குடும்பத்துக்கு சர்பிரைஸ் கொடுத்த இந்திய பவுலர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ