தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அணியில், நட்சத்திர ஆட்டகாரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் இவர் தனது யோயோ டெஸ்டினை வெற்றிகரமாக முடித்தார் இதனால் இவருக்கும் தற்போது மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


டி20 போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. அக்சர் படேல், மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



டி20 அணி விவரம்: 


விராட் கோலி(C), ரோஹித் சர்மா(VC), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, தோனி(WK), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மணிஷ் பாண்டே, அக்சர் படேல், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, உனாட்கட், ஷர்துல் தாக்கூர்.