17:09 04-10-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 89 ஒவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 364 ரன்கள் குவித்துள்ளது.



விராட் கோலி 72(137) மற்றும் ரிஷாப் பன்ட் 17(21) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


மேற்கிந்தி தீவுகள் அணி தரப்பில் கேப்ரியல் மற்றும் கீமோ பவுள் தலா 2 விக்கெட்டுகளை குவித்துள்ளனர்!



14:13 04-10-2018


அபரா ஆட்டத்தினை வெளிப்படுத்திய ப்ரித்வி 134(154) ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து ரஹானே களமிறங்கியுள்ளார்.



தற்போதைய நிலவரப்படி இந்தியா 51 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு  232 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 4(16) மற்றும் ரஹானே 0(4) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



13:33 04-10-2018


சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜாரா 86(130) ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து அணித்தலைவர் விராட் கோலி களமிறங்கியுள்ளார்.


தற்போதைய நிலவரப்படி இந்தியா 43.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு  209 ரன்கள் குவித்துள்ளது. ப்ரித்வி ஷா 116(128) மற்றும் விராட் கோலி 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!




11:36 04-10-2018
தற்போதைய நிலவரப்படி இந்தியா 25 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு  131 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 56(74) மற்றும் ப்ரித்வி ஷா 75(74) ரன்களுடன்  களத்தில் உள்ளனர்!



இந்தியா - மேற்கிந்தியத்தீவு அணிகள் மோதும் முதலவாதல் டெஸ்ட் போட்டியில் KL ராகுல் ரன் ஏதும் இன்றி வெளியேறி ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்!


இந்தியா - மேற்கிந்தியத்தீவு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ராஜ்கொட் சௌராஸ்ட்ரா கிரிக்கட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் ஓய்வு பெற்ற அணித்தலைவர் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் ப்ரத்திவி ஷா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறார்.


இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 0(4) ரன் ஏதும் இன்றி வெளியேற மற்றொரு தொடக்க வீரரான ப்ரித்திவி ஷா நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வகுகின்றார். அவருக்கு துணையாக புஜாரா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்.


தற்போதைய நிலவரப்படி இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 21(31) மற்றும் ப்ரித்வி ஷா 32(32) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!