அப்போ சச்சின்... இப்போ விராட் - இது 2003 ஸ்கிரிப்ட் ஆச்சே - அப்போ இந்தியாவுக்கு கப் இல்லையா...!
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கும், 2003 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணிக்கும் சிற்சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.
India National Cricket Team: ஒருநாள் போட்டிக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup) என்றாலே அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா எனலாம். முக்கிய அணிகள் மோதும் ஒரு நீண்ட தொடர் என்பதால் அதில் இருக்கும் சுவாரஸ்யம் வேறு தொடரில் கிடைப்பது அரிது. மேலும், உலகக் கோப்பையை வெல்வது மாபெரும் கனவாகவும் இருக்கிறது.
நினைவோ ஒரு பறவை
இதுவரை 12 உலகக் கோப்பை தொடர்கள் நிறைவடைந்துள்ளன. 13ஆவது தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணி தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. அந்த வகையில், மேற்கிந்திய தீவுகள் இம்முறை உலகக் கோப்பை தொடருக்கே தகுதிபெறவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இது ஒருபுறம் இருக்க இந்திய அணி, 1983 மற்றும் 2011 ஆகிய உலகக்கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றன. 1987, 1996, 2015, 2019 ஆகிய தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறியது. 1975, 1979, 1992, 1999, 2007 ஆகிய தொடர்கள் இந்திய அணி குரூப் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. ஆனால், இந்த அனைத்து உலகக் கோப்பையையும் விட 2003 உலகக் கோப்பை என்பது இந்திய அணி ரசிகர்களால் மறக்க முடியாதது.
2003 மற்றும் 2023 - ஓர் ஒப்பீடு
2003 உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2003) இந்தியா இறுதிப்போட்டி வரை வந்து, ஆஸ்திரேலியாவிடம் உதை வாங்கி இரண்டாமிடத்தோடு நிறைவு செய்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மட்டுமே ஆதிக்கம் செலுத்தி கோப்பையை தட்டித் தூக்கியது. அந்த தொடர் முழுவதும் நல்ல ஃபார்மில் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் இமாலய இலக்கால் தடுமாறி அன்றைய ஆட்டத்தில் விரைவாக ஆட்டமிழந்தது இன்னும் பலரின் நினைவுகளில் பதிவாகி இருக்கலாம். இருப்பினும், அந்த தொடரில் சச்சின்தான் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
அந்த வகையில், 2003 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணிக்கும், நடப்பு உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) விளையாடும் இந்திய அணிக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருப்பதாக இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பேசி வருகின்றனர். அவர்கள் கூறும் லாஜிக் என்ன என்பதை தொடர்ந்து காணலாம்.
மூன்று முரட்டு லாஜிக்
அதாவது, 1999இல் இந்திய அணியை முகமது அசாருதீன் வழிநடத்தினார், ஆனால் 2003இல் கங்குலி வந்து முதல்முறையாக உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்டார். கங்குலி 1999 உலகக் கோப்பையிலும் விளையாடியவர். அதேபோல, 2019 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமை தாங்கினார். தற்போது 2023இல் ரோஹித் சர்மா முதல்முறையாக உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித் 2019 உலகக் கோப்பையிலும் விளையாடியவர் ஆவார். இது முதல் லாஜிக்.
இரண்டாவது, 2003இல் சச்சின் - சேவாக் (Sehwag) ஜோடி ஓப்பனிங்கில் இறங்கி வெளுத்து வாங்கியது. ஆனால், அதில் சேவாக்கும், ஒன் டவுணில் விளையாடிய கேப்டன் சௌரவ் கங்குலியும் (Ganguly) நடப்பு உலகக் கோப்பையில் ரோஹித் - கில் ஆகியோரை போன்ற விளையாடியதாக ரசிகர்கள் எண்ணுகிறார்கள். இதில் குறிப்பாக, கங்குலி கேப்டனாக இருக்கும் போது சேவாக்கை ஓப்பனிங்கில் அறிமுகப்படுத்தினார். அதேபோல், ரோஹித் கில்லை ஓப்பனிங்கில் அறிமுகப்படுத்தினார் என்பது இரண்டாவது லாஜிக்.
இந்த இரண்டு லாஜிக்கை விட இந்த மூன்றாவது லாஜிக் தான் மிக மிக சுவாரஸ்யமானது. அந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 81, 98, 97, 83 என நான்கு முறை 80+ ரன்களை தாண்டியும் சதத்தை பூர்த்தி செய்யாமல் வந்தார். அதேபோல் தற்போது விராட் கோலி (Virat Kohli) 85, 95, 88 என மூன்று முறை 80+ ரன்களை கடந்தும் சதத்தை பூர்த்தி செய்யவில்லை. இன்னும் போட்டிகள் உள்ளது என்பதால் விராட் கோலி நான்கு முறையும் இதை செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சச்சின் அப்போது MRF பேட் வைத்திருந்தார், கோலியும் இப்போது MRF பேட்டையே வைத்திருக்கிறார்.
லாஜிக்கா... மேஜிக்கா...?
இந்த மூன்று லாஜிக்கின்படி, அவர்கள் கூற வருவது 2003ஆம் ஆண்டை போல இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவிவிடுமோ என்பதுதான். ஆனால், இந்த லாஜிக்கை எல்லாம் தாண்டி இந்தியா மேஜிக் செய்துவிடும் என பலரும் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | இந்த ஒரு மேட்சுல தோற்றால் என்னை மொத்தமா கட்டம் கட்டிடுவாங்க - ரோகித் சர்மா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ