கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லத்தீஷ் மல்லீங்காவிற்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் உடன் விளையாடிய இலங்கை வீரர் லத்தீஷ் மல்லீங்கா இன்று தனது 35-வது பிறந்தநாளினை கொண்டாடி வருகின்றார்.



இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. "நான் மலிங்காவிற்கு எதிராக நின்று பேட்டிங் செய்யும்போதெல்லாம் 'பால் கோ நஹி, பால் கோ தேகோ(முடியை பார்க்காதே, பந்தை பார்)' என விமர்சித்ததுண்டு என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது சச்சின் டெண்டுல்கரின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது.


தனது வேகப்பந்து வீச்சினால் இலங்கை அணியின் வெற்றியினை பல முறை உறுதி செய்தவர் மலீங்கா. பந்துவீச்சின் போது இவரது அனுகுமுறைகள் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். இந்த அனுகுமுறைகள் மட்டையாளரை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும் என்றாலும் வியப்பில்லை.


2013-ஆம் ஆண்டு நடைப்பெற்ற IPL போட்டியில் ஒன்றாக விளையாடிய சச்சின் மற்றும் மலீங்கா, தாங்கள் பங்காற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பலமாய் இருந்தது அனைவரும் அறிந்தது. எனினும் சமீபத்திய IPL போட்டியில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்காமல் போனது வேதனை