இளம்வயதில் டென்னிஸ் வீராங்கனை அனா ஓய்வு
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான அனா இவானோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பெல்கிரேட்: முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான அனா இவானோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகதர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செர்பிய வீராங்கனையும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அனா இவானோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகதர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
செர்பியன் நாட்டைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனையான அனா இவானோவிச்க்கு 29 வயது. அவர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் கிரான்ட் ஸ்லாம் பட்டம் பெறும் முதல் செர்பிய வீராங்கனை ஆக திகழ்தார்.
12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.
2015-ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி வீராங்கனையாக வலம் வந்த இவானோவிச் சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார்.
இந்நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது ஓய்வை அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ள இவானோவிச்,இது ஒரு கடினமான முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது தரவரிசைப் பட்டியலில் 63-ம் இடத்தில் உள்ள அனா இவானோவிச் இந்த ஆண்டுதான், ஜெர்மனியின் முன்னாள் கால்பந்து வீரர் பாஸ்டியன் ஸ்வச்வெய்டிஜரை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.