தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்த மாதம் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கும், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கும் இந்திய அணியின் தேர்வாளர்கள் இந்திய அணியை அறிவித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி, கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முடிவடையாத 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்


ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருந்த இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களில் இருந்தும் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கான பட்டியலில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பதால், இனி இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது மங்கிவிட்டதாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | ஐபிஎல் 2022 - ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப்


இஷாந்த் சர்மா கடைசி போட்டி


இஷாந்த் சர்மா தனது கடைசி சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக நவம்பர் 2021 ஆம் ஆண்டு விளையாடினார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தது. அந்த தொடரில் கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அப்போது, இனி வரும் காலங்களில் அவருக்கு வாய்ப்பு கடினம் என்பது யூகிக்கப்பட்ட நிலையில், அந்த யூகம் இப்போது நிஜமாகி வருகிறது. 



ஏன் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்?


முகமது சிராஜ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் வருகையால் இஷாந்த் சர்மாவுக்கான முக்கியத்துவம் குறைந்தது. மேலும், பந்துவீச்சிலும் அவர் அண்மைக்காலமாக சிறப்பாக செயல்படவில்லை. இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இஷாந்த் சர்மா, 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் வீரரின் காதலியா இவர்?
இந்திய டெஸ்ட் அணி 


ரோஹித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பந்த், பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR