மொயின் அலியால் சிஎஸ்கே-வில் பறிபோன நியூசிலாந்து வீரரின் வாய்ப்பு
மொயின் அலி சென்னை அணிக்கு திரும்பியிருப்பதால் முதல் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரருக்கான இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபிஎல் தொடக்கம் இதுவரை சிறப்பாக அமையவில்லை. முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய அந்த அணி, அடுத்த போட்டியிலாவது வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. சிறப்பாக விளையாடியபோதும், சிறிய தவறுகளால் அந்த அணி தோல்விப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் போட்டியில் விளையாடாத மொயீன் அலி, 2வது போட்டிக்கு திரும்பியுள்ளார். அவரின் வருகை அணிக்கு நம்பிக்கை அளித்தாலும், ஒரு வீரருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: சிஎஸ்கே தோல்விக்கு மொயின் அலி செய்த தவறு காரணமா?
நியூசிலாந்து வீரர்
நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். முதல் போட்டியில் விளையாடிய அவர், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். முதல் போட்டியில் விசா பிரச்சனை காரணமாக மொயின் அலி திரும்ப முடியாததால் அவருக்கு பதிலாக டெவோன் கான்வேயை சென்னை அணி தேர்ந்தெடுத்தது. இப்போது அவர் திரும்பிவிட்டதால் டெவோன் கான்வே எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாய்ப்பு கிடைப்பது கடினம்
டெவோன் கான்வே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால், மொயின் அலி சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதால், அவருக்கு பதிலாக டெவோன் கான்வேயை களத்தில் இறக்குவது என்பது மிகவும் கடினம். இதனால் எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் டெவோன் கான்வே சென்னை அணியின் ஆடும் லெவனில் இருக்கமாட்டார் என்பதால், அவருடைய ஐபிஎல் கேரியரும் ஆபத்தை நோக்கி செல்வதாக தெரிகிறது. ஏனென்றால் ஆடும் லெவனில் இடம்பிடித்து விளையாடமல் இருக்கும் அவரை அடுத்த ஆண்டு சென்னை அணி தக்க வைக்குமா? என்பது தெரியாது.
முதல் போட்டியில் டெவோன் கான்வே
கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய டெவோன் கான்வே 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டதால், ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். ஏனென்றால், கடந்த போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு மொயீன் அலி காரணம் என குற்றம்சாட்டும் ரசிகர்கள் அவருக்கு பதிலாக டெவோன் கான்வேவை லெவனில் சேர்த்திருக்கலாம் என கூறி வருகின்றனர். போதிய வாய்ப்பு கொடுக்காமல் அவரை வெளியே உட்கார வைக்கும் நினைக்கும் சிஎஸ்கேவின் முடிவுக்கும் ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்து அணிக்காக 20 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 602 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் படிக்க | கொல்கத்தா அணியை அலறவிட்ட ஆர்சிபி அணியின் இளம் வீரர் ஷபாஸ் அகமது யார்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR