2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையை (World Cup) இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது, நம் தல எம்.எஸ்.தோனியின் (MS.Dhoni) தலைமையிலான இந்திய அணி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது தல தோனி அடித்த வின்னிங் ஷாட்டை, அந்த சிக்ஸரை, அவரது ரசிகர்களால் ஒரு போதும் மறக்க முடியாது. 


2011 ஆண்டு, மும்பை (Mumbai) வான்கடே ஸ்டேடியத்தில், உலக கோப்பை இறுதி போட்டியில் அவர் விளாசிய சிக்ஸர்  பார்வையாளர்கள் மத்தியில் போய் விழுந்தது. அந்த பந்தை தேடும் முயற்சி தொடங்கிய போது, கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil gavaskar), எனக்கு அது  பற்றி தெரியும் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


உலக கோப்பையை பெற்றுத்தந்த அந்த சிக்ஸர் பந்தை, ஒரு பார்வையாளரிடம் இருப்பதாகவும் , அவர் தனது நண்பர் ஒருவருக்கு நெருக்கமானவர் எனவும் கூறியுள்ளார்.


அந்த பார்வையாளரிடம் தான் அந்த பந்து இன்னும் இருக்கிறது. அந்த பார்வையாளர் அதனை பாதுகாத்து வருகிறார். அந்த பந்தின் மேல்  உலக கோப்பை பந்தய டிக்கெட்டும் லாமினேட் செய்யப்பட்டுள்ளது. 


அவர் மூலம் அவர் அமர்ந்திருந்த இருக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. அது மும்பை கிரிக்கெட் கழகத்தின் பெவிலியன் எல் ப்ளாக்கில் உள்ள 210ம் எண் இருக்கை ஆகும். 


தல தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததிலிருந்து, இந்த சிக்ஸர் பந்தை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அவர் அடித்த பந்து விழுந்த பார்வையாளர் இருக்கைக்கு அவர் பெயரை சூட்டி கவுரவிக்க வேண்டும் என மும்பை கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர் கொடுத்த ஐடியாவின் அடிப்படையில் இந்த  பந்தை தேடும் முயற்சி தொடங்கியது.


ALSO READ | ஹாட்ரிக் சிக்ஸரை விளாசி தோல்வியை மறக்கச் செய்த தல தோனி..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR