தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து, வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி, இப்படியொரு தோல்வியை சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, 2 முக்கிய வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. ஜடேஜா


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரவீந்திரஜடேஜா இடம்பெறவில்லை. காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், இப்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற அவர், வெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கு தயாராக உள்ளார். அவர் இந்திய அணியில் இடம்பிடித்தால் பின்வரிசை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை பலமாகும் என நினைக்கும் டிராவிட், அவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ALSO READ | Watch! சிக்சரில் கோலிக்கு டஃப் கொடுக்கும் தாத்தா..


2. ஹர்திக் பாண்டியா


ஹர்திக் பாண்டியா உடல் தகுதி பிரச்சனை காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் அவரது பெயரை தேர்வுக்குழு பரிசீலிக்க இருந்தபோதும், அதனை வேண்டாம் என நிராகரித்துவிட்டார் பாண்டியா. முழு உடல் தகுதியை எட்டியபிறகு இந்திய அணிக்கு திரும்புகிறேன் என தேர்வுக்குழுவுக்கு கோரிக்கையும் வைத்திருந்தார். இந்நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழு பிட்னஸை எட்டியிருக்கும் அவரையும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சேர்க்க தலைமை பயிற்சியாளர் டிராவிட் முடிவெடுத்துள்ளார்.


ALSO READ | BBL -ல் விநோதம்..! பிளேயிங் 11-ல் விளையாடும் பயிற்சியாளர்..!


3. ரோகித்சர்மா


ரோகித் ஷர்மாவும் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் விலகினார். இப்போது முழு உடல் தகுதியை எட்டியிருக்கும் அவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தலைமையேற்று வழிநடத்த உள்ளார். 


ரோகித், ஜடேஜா, பாண்டியா ஆகிய மூவரும் தென்னாப்பிரிக்கா தொடரில் இல்லாதது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர்கள் திரும்ப உள்ளதால், இந்திய அணி நிச்சயம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR