கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்துள்ளது. அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் போட்டியில், ஒரு நட்சத்திர வீரர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வீரர் டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரிய ஆயுதமாக மாறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேகப்பந்துவீச்சாளர்


ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் வெறிக்கும் முக்கிய பங்களிப்பு செய்தார். ஜிம்பாப்வேயின் பேட்ஸ்மேன்களால் அவரது பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில், அவரது 10 ஓவர்கள் தோல்விக்கும் வெற்றிக்கும் இடையிலான வித்தியாசத்தை தீர்மானிக்கிறது.


மேலும் படிக்க | கங்குலியிடம் எனக்காக பேசியவர் இவர் - சேவாக் ஓபன் டாக்


டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு 


கிருஷ்ணாவின் பந்துகளை விளையாடுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு சில பந்துகளில் போட்டியின் போக்கை மாற்றி விடுகிறார். எந்த பேட்ஸ்மேனின் விக்கெட்டையும் வீழ்த்தும் திறன் இவருக்கு உண்டு. பிரசித் கிருஷ்ணா மிகத் துல்லியமான லைன் மற்றும் லென்தில் அவர் வீசுவதால், ரன்கள் அடிப்பது சிரமமாகிறது.இதனால் இவர் டி20 உலகக் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 


பிரசித் கிருஷ்ணாவின் ஸ்பெஷல்


பிரசித் கிருஷ்ணா ஸ்லோ பந்துகளை துல்லியமாக வீசி மிக விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே யார்க்கர் பந்து வீசுவதிலும் வல்லவராக இருக்கிறார். இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.


மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா என்டிரியால் 27 வயது வீரருக்கு நேர்ந்த சோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ