ஐபிஎல் 2022 பல இளம் வீரர்களுக்கு மறக்க முடியாததாக இருந்தது. இந்த சீசனில் இருந்து இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கொண்ட பல எதிர்கால நட்சத்திரங்களை பார்க்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடியபோதும், அந்த அணியில் இடம்பிடித்திருந்த திலக் வர்மா, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்த கருத்து கோலியின் இடத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தாக பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | RCB மேல கைய வச்சா இதான் கதியாம்... - மாறவே மாறாத ‘நாக்-அவுட்’ சென்டிமென்ட்!


திலக் வர்மாவின் பேட்டிங்  


மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய திலக் வர்மா 4வது ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். பெரிய பந்துவீச்சாளர்களைக் கூட அசால்டாக எதிர்கொண்ட அவர், மும்பை அணியை ஒரு சில போட்டிகளில் வெற்றிக்கு அருகாமை வரை அழைத்துச் சென்றார். மேலும், சில போட்டிகளில் கவுரமான ஸ்கோரை எடுக்க உதவினார். 


இவரது பேட்டிங்கை பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்திய அணிக்கு 3வது இடத்தில் இறங்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த இடத்தில் தற்போது விராட் கோலி வளையாடி வருகிறார்.  



திலக் வர்மாவின் ரெக்கார்டு


ஐபிஎல் 2022 தொடரில் 14 போட்டிகளில் களமிறங்கிய திலக் வர்மா 397 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதங்களும் அடங்கும். அவரின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட ரோகித் சர்மா, திலக் வர்மா விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் திலக் வர்மா விளையாடுவார் எனவும் தெரிவித்துள்ளார்


ரோகித் வாய்ப்பு கொடுப்பாரா?



ரோகித் சர்மா கொடுத்துள்ள இந்தப் பேட்டி, திலக்வர்மாவின் இந்திய அணி அறிமுகம் வெகுதூரம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அதேநேரத்தில் எப்போது இந்திய அணிக்கு விளையாடுவார் என்பது தெரியவில்லை. இருப்பினும், திலக் வர்மா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு விளையாடும்பட்சத்தில் கோலிக்கு மாற்றான வீரராக இருப்பார் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதனால், கோலியின் ஃபார்ம் அவுட், திலக் வர்மாவின் வாய்ப்பை வெகுவாக பிரகாசப்படுத்தும் என கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Dinesh Karthik: தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணியில் பறிபோன 2 பேரின் வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR