உலக கோப்பை ஹாக்கி; தடுமாறும் ஆஸ்., சீனா அணி வீரர்கள்!
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி தொடரின் B பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா போராடி வெற்றி பெற்றுள்ளது!
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி தொடரின் B பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா போராடி வெற்றி பெற்றுள்ளது!
14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த நவம்பர் 28-ஆம் நாள் துவங்கி நடைப்பெறு வருகின்றன. இத்தொடரின் B பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஐயர்லாந்து அணியினை எதிர்கொண்டது. இப்போட்டியில் எளிதில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலயில் 2-1 என்ற கணக்கில் போராட்ட வெற்றியினை பெற்றுள்ளது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்றியது. ஆஸ்திரேலிய அணியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பிளாக் கோவெர்ஸ் 11-வது நிமிடத்திலும், டிம் பிரான்ட் 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அயர்லாந்து அணி தரப்பில் ஷேன் ஒடோனோக் 13-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, அறிமுக அணியான சீனா-வுடன் விளையாடியது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் முடிவில்லாமல் முடிந்தது.
இங்கிலாந்து அணியில் மார்க் கிளச்சோர்னி 14-வது நிமிடத்திலும், லியாம் அன்செல் 48-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சீனா அணி தரப்பில் ஜியாபிங் 5-வது நிமிடத்திலும், டலாக் டு 59-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். எனினும் இரு அணியின் கோல்களும் வெற்றிக்கு வாய்ப்பளிக்காமல் ஏமாற்றியது.